மனிதனை தெய்வம் ஆக்கிய மனிதன் மறந்து போய் கூட அதை ஒத்துக்கொள்ள முன்வருகின்றான் இல்லை .மனிதர்களை உயர்வாக மதிப்பதை தப்பென்று சொல்லவும் நான் வரவில்லை .பூர்வீக காலத்தில் குமரி மலையில் பெரும் கடல் அழிவுகளில் இருந்து தப்பிய மக்களை நல்வழி படுத்தி அவர்கள் வாழ்க்கைக்கு உதவியவர்களை மேன்மையானவர்களாக மதித்து வணங்கினார்கள் .இது நன்றி மறவாமை என்ற உயரிய கருத்தில் போற்றுதற்கு உரிய விடயமே அவர்கள் வாழ்ந்து வரலாறு ஆகி போன இடங்களை புனிதமான இடங்களாக நினைவாலயம் சிலை அமைத்து வழிபடுவது சால சிறந்ததே !!!!
குமரி கண்டத்தில் குமரி மலைக்கு அருகில் வாழ்த்த மக்கள் அன்னை தந்தையை போற்றி வாழ்ந்த மக்கள் இயற்கை அழிவுகளால் பல துன்பங்களுக்கு உள்ளாகினார்கள் .மனித குலம் தோன்றும் முன்னமே பல இராட்சத விலங்குகளும் பாம்புகளும் பல்வேறு உயிரினங்களும் தோன்றியதை பல்வேறு ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றது .எனவே மனிதனை துன்பப் படுத்துவதற்கு இயற்கை மட்டும் அல்ல விலங்குகளும் பாம்புகளும் பல்வேறு சந்தர்பங்களில் காரணமாய் இருந்தது .இயற்கையாலும் விலங்குகள் பாம்புகளாலும் தாக்கப்பட்டு பாதிக்க பட்ட மக்கள் மனங்களில் பயம் உருவாகியது .பயத்தின் மேலீட்டால் கையெடுத்து இவற்றை வணங்கும் முறை ஏற்பட்டது .இயற்கையின் சீற்றத்தை இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களால் கூட கட்டு படுத்த முடியாது என்பது சகலரும் அறிந்த உண்மை .ஆனால் விலங்குகளை பாம்புகளை நாம் சீண்டாமல் இருக்கும் வரை அவை எம்மை துன்புறுத்தாது என்பதும் பல சந்தர்பங்களின் உண்மையாகின்றது .அதுவே நாக வணக்கம் உலகில் நீடித்ததற்கு காரணம் ஆனது .சில விலங்குகளை எதிர்த்து அழித்தாலேயே மனித இனம் வாழலாம் என்ற நிலை பல்வேறு சந்தர்பத்தில் உணரப்பட்டதால் அன்றைய மனிதர்கள் கொடிய விலங்குகளை எதிர்த்து போரிட்டார்கள் அந்த விலங்குகளை அழித்து அடக்கி வெற்றி பெற்றவர்கள் சக மனிதர்களால் போற்றப்பட்டார்கள் .உயர்ந்தவர்களாக கௌரவிக்கபட்டார்கள் .இவர்களை மனித இனத்தில் காவலர்களாக நினைத்தார்கள் .சக மனிதர்களோடு உண்டு உறங்கி நன்மை தீமைகளில் பங்கெடுத்து காவலர்களாய் இருந்த மனிதர்கள் உயிர்பிரியும் வேளையில் இவர்களோடு உறவாடிய மக்கள் இவர்களுக்கு நினைவு கல்லறைகள் வைத்து வழிபட்டார்கள். இவர்கள் நினைவாக தான தர்மங்கள் செய்தார்கள் .அந்த தான தர்மங்களுக்காக மடங்களை கட்டினார்கள் .அந்த மடங்களுக்குள் இவர்கள் உருவ சிலைகளை பொறித்து வணக்கத்துக்கு உரியவர்களாக நினைவு கொண்டார்கள் .அந்த மடங்கள் பிற்காலத்தில் கோவில்களாக மாற்றம் அடைந்தது .
மனித குலத்தில் வளர்சியும் அவர்களது நாகரிக வளர்சியும் மனிதனது ஆசைகளும் அவர்களது புரிந்துணர்வும் பூர்வீக வணக்கமுறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தியது .மனித மனத்தினில் ஒரு நம்பிக்கையை வரவைப்பதற்காக புராண இதிகாசங்கள் செவிவழி கதைகள் பல்வேறு இலக்கியங்கள் என்று அன்றைய உண்மைகளையும் உட்புகுத்தி எழுதியவர்கள் சொன்னவர்களின் கற்பனைகளையும் இடையில் புகுத்தி பல்வேறு விதமாக எழுதி வந்தார்கள். வரலாறுகள் சொல்லும் நல்லதை செய்த மனிதர்களை வணங்கும் முறையை மக்கள் மத்தியில் உருவாக்கி வந்தார்கள் இந்த வழக்கம் அன்று தொட்டு தொடர்ந்து வந்தது .
மனித மனத்துக்குள் சுய நலம் என்ற விஷம் என்றைக்கு வெளியே எட்டிப்பார்க்க தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் சுயநலன் சார்ந்து தவறுகளுக்கும் தலை சாய்க்க தொடங்கிவிட்டான் இதனால் சில தவறானவர்களையும் மனித சுயநலத்தாலும் அவர்களது அடக்கி ஆளும் வைராக்கியத்தாலும் மனிதர்கள் அவர்களையும் வணங்கவேண்டிய நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கபட்டார்கள் இதனால் அவர்களுக்கும் மடம் கட்டி சிலை எழுப்பி வழிபடவேண்டிய நிலையில் மனித இனம் மாறுதல்களுக்கு உள்ளானது .அந்தவகையில் தொடங்கிய வழிபாட்டு பயணத்தில் பயணித்து நாம் நன்றாக அறிந்த காலத்துக்கு வருவோம் ஆயின் புராணங்கள் கூறும் பலரை நாம் தெய்வமாக வணங்குகின்றோம் இதிகாசங்கள் சொல்லும் பல மனிதர்களை நாம் தெய்வமாக வணகுகின்றோம் செவி வழி கதைகள் மரபு வழி கதைகள் என பல்வேறுவகையான கதைகளில் வரும் பலரை நாம் தெய்வமாக வணங்குகின்றோம் இவற்றில் கூட நல்லவர்களும் மேன்மையான தொண்டாற்றிய வர்களும் இருக்கின்றார்கள் என்பது உண்மையாயிலும் எம் பெளத்தறிவு சொல்லும் தவறானவர்களும் இருக்கின்றார்கள் .இவை பல்வேறு ஆய்வுக்கு உரிய விடயம்களாய் இருப்பதாக வைத்து கொள்வோம் .ஆனால் இன்று எம்மவர் சினிமா நடிகர்களுக்கு கோவில் கட்டுகின்றார்கள் ஸ்ரீதேவி ,நதியா ,குஸ்பு போன்றவர்களுக்கு கோவில் கட்டினார்கள் இதை நாம் அலசி ஆராய்ந்து சிந்தித்து பார்த்தால் மனித இனத்தின் வளர்ச்சி சுயநலத்தாலும் பேராசையாலும் எவ்வளவு தூரம் பாதிக்க பட்டு இருக்கின்றது என்பதை விளங்கி கொள்ளலாம்
மனித வாழ்வின் பல்வேறு வாழ்வியல் மாற்றங்களால் இன்று சினிமா நடிகை குஸ்புவுக்கு கோவில் கட்டும் நிலையில் நம் தமிழ் இனம் தவறான பாதையில் பயணிப்பதை நினைக்கும் பொழுது நாம் உண்மையில் எந்த ஒரு மகான்களையும் மதிக்கவில்லை என்பது தெளிவாகின்றது .நாவுக்கு பால் இன்றி பல கோடி குழந்தைகள் தவிக்கையில் பசுவின் பாலை நாம் அதன் கன்றுகளை குடிக்க விடாமல் களவாடி கணபதி சிலைக்கும் நடிகர்கள் கட் அவுட் படங்களுக்கும் ஊற்றுகின்றோம்,,,,,,,,,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக