தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின் வாக்குமூலத்தின் சில வரிகள்


காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின்
வாக்குமூலத்தின் சில வரிகள் **

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள்
நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ்
அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத்
தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட
சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும்
விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல்
ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ்
சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால்,
இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக
அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின்
அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ்
இந்தியாவுக்கு வெளியில் மறைந்து விட்டார்.

பாகிஸ்தானில்
இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த
இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக
ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம்
பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது.


பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில்
வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய
அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால்,
என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க
முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும்
ஆயிரக்கணக்கான இந்துக்கள்
படுகொலை செய்யப்பட்ட செய்தியைக்
கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்ப
ட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த
இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள்
விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர்.
இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர்.

இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள்
கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது.
இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய
அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித்
துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.

"தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார்.
அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய
கடமையிலிருந்து தவறிவிட்டார்.
பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம்
தெரிவித்ததன் மூலம் இந்த
தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.
பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர்
இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின்
தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார்


The-blessed Nagore பிரிவினைக்கு முந்தய சம்பவங்கள் மிகவும் வருந்ததக்கது... கலவரத்தால் சம அளவில் முஸ்லிம்களும் ஹிந்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.. ஊர் மாறிய முஸ்லிம்களின் சொத்துகளை ஹிந்துகள் விற்று காசை அனுப்பிய வரலாறும் உண்டு, பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களுடைய உடமைகளை பாதுகாத்து பத்திரமாக அனுப்பிய முச்ல்ம்களின் வரலாறும் உண்டு..

அந்த பகுதி மக்களே அதை மறந்து சகோதர உறவு மேற்கொள்ளும் நேரத்தில், கோட்சே காந்தியை சுட்டதை தமிழகத்தில் நியாயபடுத்தும் போக்கு மிகவும் வருந்ததக்கது.


ஃபிடல் காஸ்ட்ரோ கோட்சை ஒரு தீவிரவாதி.. 

மேலை நாடுகளின் கைகூலிகளால் மூளை சலவை செய்யபட்ட ஒரு மதவெறியர்..


ஸ்ரீபாலன் பஞ்சலிங்கம் ஃபிடல் காஸ்ட்ரோ இந்துக்களுக்கு ஆதரவாக நீங்களே இல்லை,இந்தியாவில் இன்று முஸ்லீம் ஆதரவே உள்ளது!அன்று கிறிஸ்தவ ஆதரவும் இஸ்லாம் ஆதரவும் இந்துக்களை விழுன்கிக்கொண்டிருந்த காலம்.அழிப்பவனே அழிபவனுக்கு மூளைச்சலவை செய்ததாக சொல்வது உங்கள் அறியாமையா?காந்தியை அழிக்கவேண்டிய அவசியம் மேலைநாட்டில் இருக்கவில்லை,காந்தி செய்த தவறுகள் அதற்கு வழி சமைத்தன!முஸ்லீம்களும் இந்துக்களும் கிறிஸ்தவரும் சகோதரராக இருக்கவேண்டுமென்று யாரும் சொன்னால் அது மூடத்தனத்தின் உச்சம்!!வேறு கொள்கையில் உள்ளவர் இணைவது அரசியலில் மட்டுமே சாத்தியம்,ஏனெனில் அங்கு உண்மையான கொள்கை இருப்பதில்லை!மார்க்கங்கள் மாறுபட்டவை,அதனால்த்தான் பல மதங்கள் உள்ளன!அனைவரும் பாதுகாப்பாக இருக்க காந்தி என்ன செய்தார் என்பதே நம் கேள்வி!!தேச பிதா கண்ணீர் மட்டும் வடித்தால் போதுமா?உண்ணாவிரதம் இருந்து சாதிக்க இவர்கள் என்ன ஆங்கிலேயரா??இந்து தர்மம்,யுத்தநெறி பின்பற்றுவோர் இங்கு இல்லை,குரான் சொனபடி நடக்கும் முஸ்லீம்களும் இல்லை,பைபிளின் படி அன்பை போதிக்கும் கிறிஸ்தவனும் இல்லை,புத்தர்களும் இல்லை,சமணரும் இல்லை!அனைவரும் கொலை வெறியர்!எனவே அவர்களிடமிருந்து அப்பாவிகளை காப்பாற்றத் தவறி நாடு பிரிவதை ஒப்புக்கொண்ட காந்தியை இந்துமதம் அழிவுக்கான ஒரு காரணமாக கோட்சே எண்ணி சுட்டது அவரின் நடுநிலை இன்மையால் என்றே தோன்றுகிறது!கோட்சே சுடாவிட்டால் இஸ்லாமியனோ,கிறிஸ்தவனோ சுட்டிருக்கலாம்(இலங்கையில் ராஜீவை முதலில் சிங்களவனே கொல்ல முயன்றான்,தப்பினார்,உயிருடன் வாழ்ந்தாரா?கொல்லப்பட்டார்,அதனால் தமிழினம் இந்தியாவில் தீண்டத் தகாதோராயினர்)வரலாறு சொலும் பாடம் இதுதானே!இன்றும் பிரிவினைதானே பலரை கொல்கிறது!பிரிவு வேண்டாம் என்போர் நாட்டை பிரிக்கின்றனர்,பிரிவு உண்டு என்போர் நாட்டை பிரிக்கக்கூடாது என்கின்றனர்!எனினும் காந்தியை கோட்சே கொன்றதும் காந்தி பிறந்த நாட்டில் கோட்சே வை தூக்கில் போட்டதும்,இன்றும் தூக்குத்தண்டனைகள் மூலம் காந்தீயத்தைகொல்வதும் தவறே!!இதுதான் நாட்டாமை தீர்ப்பு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக