தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஆகஸ்ட், 2013

பூமியின் புதிய பகுதி கண்டுபிடிப்பு

இதுவரை மனிதனின் பார்வையில் படாத பூமியின் ஒரு புதிய பகுதி தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அமேரிக்காவில் உள்ள கிராண்ட் கேனியன் (Grand Canyon) பள்ளத்தாக்கை விட இரு மடங்கு பெரிய செங்குத்தான பள்ளத்தாக்குப் பகுதி இது.
உலகின் மிகப்பெரிய தீவான க்ரீன்லாண்ட் (Greenland)-ன் மைய பகுதியில் ஆழமான தழும்பு போல காட்சியளிக்கிறது இந்த பள்ளத்தாக்கு.
இந்த பள்ளத்தாக்கு சுமார் 2 மைல் உயர பனிப்பாறைகளின் அடியில் மறைந்துள்ளது. ப்ரிஸ்டல் (Bristol) பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜொனாத்தன் பேம்பர் அந்த பள்ளத்தாக்கிலிருக்கும் பாறைகள் எந்த வகையை சேர்ந்தவை என்பதை ஆராய்ந்து வருகிறார்.
இதனை கண்டறிய 40 ஆண்டுகளாக ஆய்வு விமானங்கள் அந்த பகுதியின்மேல் குறுக்கும் நெடுக்குமாக பறந்து தகவல்களை திரட்டி வந்தன. அந்த விமானங்களில் பொருத்தப்பட்டிருந்த ரேடார் (Radar) கருவி பனிப்பாறைகளின் கீழே மறைந்திருப்பவற்றை காண உதவியது.
சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு க்ரீன்லாண்ட் (Greenland) பனியினால் மூடப்படுவதற்கு முன்னதாக நதியின் ஓட்டத்தால் இந்த பள்ளத்தாக்கு உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
1280455_504922766252943_1100508899_n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக