பாரதத்திலுள்ள புனித நதிகளில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. இவற்றில் கங்கை நதியானது வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று மூன்று உலகங்களிலும் பாய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.
ஆகாச கங்கை, பூலோக கங்கை, பாதாள கங்கை என்று மூவுலகிலும் பாய்வதால் கங்கை நதியை "திரிபதா" என்று சொல்வர்.
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, திரிவிக்கிரமராக நெடிதுயர்ந்து வளர்ந்து, முதலடியால் பூலோகத்தையும், இரண்டாவது அடியால் வானுலகையும் அளந்தார். அப்பொ ழுது வானுலகில் பகவானின் திருவடியை தரிசித்த பிரம்மன், தன் கமண்டலத்திலிருந்த நீரால் பாதத்தைக் கழுவி பூஜை செய்தார். பெருமாளின் பாதத்திலிருந்து வழிந்த நீரே கங்கையாக உருவெடுத்ததாக புராணக்கதை யொன்று கூறுகிறது. வானுலகில் உற்பத்தியான அந்த கங்கை ஆகாச கங்கை, தேவநதி, சுரநதி, வானதி, விஷ்ணு பதம் எனப்படுகிறது.
மேலும், ஜானவி, திரிபதாகை, பாகீரதி, தேவிநதி, மந்தாகினி, வரநதி, உமைசுர நதி, தசமுகை நதி, சிர நதி, தெய்வ நதி, விமலை என கங்கைக்கு பல பெயர்கள் உள்ளன.
கங்கையானவள் பூலோகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல; ஆகாய லோகத்திற்கும், பாதாள லோகத்திற்கும் உரியவள் என்கிறது விஷ்ணு புராணம்.
பகீரதன் என்னும் மன்னன் தன் முன்னோர் கள் முக்தியடைவதற்காக வானுலகிலிருந்த கங்கையை பூமிக்குக் கொண்டுவர கடுமையான தவம் மேற்கொண்டான். அதன்பயனாக கங்கை பூமியை நோக்கிப் பாய, அதன் வேகம் பூவுலகை அழித்துவிடும் என்பதால் அதை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கி நிறுத்தி வைத்தார். இதைக் கண்ட பகீரதன் சிவபெருமானை வேண்டிக் கொண்டதால், ஏழு துளிகளை மட்டும் பூமியில் விழச் செய்தார்.
அதில் மூன்று துளிகள் ஹலாதினி, பவானி, நளினி என்று கிழக்கிலும்; அடுத்த மூன்று துளிகள் சுசக்ஷ, சிதா, சிந்து என்று மேற்கிலும் விழுந்து நதிகளாக ஓடின. அலகநந்தை என்னும் ஏழாவது துளி மட்டும் பகீரதனைத் தொடர்ந்து நதியாக ஓடிவந்தது. அப்போது ஜன்னு என்னும் முனிவரின் ஆசிரமம் குறுக்கிட, அந்த ஆசிரமத்தை மூழ்கடித்தது.
இதைக் கண்ட முனிவர் கோபமுற்று அந்த நதியை அப்படியே விழுங்கிவிட்டார். இதைக் கண்ணுற்ற பகீரதன் முனிவரிடம் தன் நிலை யைக்கூறி, தன் முன்னோர்கள் சாபநிவர்த்தி யடைய அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மனமிரங்கிய முனிவர், தான் விழுங்கிய கங்கை நதியை காது வழியாக விடுவித்தார். இதனால் கங்கை “ஜானவி’ என்று பெயர் பெற்றது. பின்னர் அந்த கங்கை நீரில் பகீரதன் தன் முன்னோர்களின் அஸ்தியைக் கரைத்து அவர்களை மோட்சம் பெறச் செய்தான். இவ்வாறு கங்கைக்கு பல வரலாறு கள் உள்ளன.
புராணத்தின் அடிப்படையில் பலவாறாகப் புகழப்படும் கங்கையின் அறிவியல்ரீதியான வரலாறு என்ன? இமயமலையின் பனி சூழ்ந்த கோமுகி என்னும் பகுதியே கங்கையின் பிறப் பிடம் என்கிறார்கள். அங்கே கங்கோத்ரி என்று பெயர் பெறுகிறது. இந்த இடம் மிகச் சிறிய சுனையாகத் திகழ்ந்தாலும் உண்மையில் இதன் பிறப் பிடம் யாரும் காண இயலாத நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கங்கை தோன்றும் இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. பக்தர்கள் இதைத்தான் தரிசித்து வழிபட்டு திரும்புகிறார்கள்.
அறிவியல் ஆராய்ச்சியின்படி கங்கை, இமயமலையில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநத்தா என்ற நதியுட இணைந்தபின், கங்கை வேகமாகப் பாயத் தொடஙகுகிறது..!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக