பெயர்: அரசமரம்
தாவரவியல் பெயர்: Ficus religiosa
தமிழகம் மட்டுமல்ல,பல ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.மரங்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.கூர்மையான
இந்து மதத்தினர்க்கும்,புத்த,சமண மதத்தினர்க்கும் இது புனிதமான மரமாகக் கருதப்படுகிறது.இந்த மரமானது ஏராளமான ஆக்சிஜனை வெளிப்படுத்துவதால் உடலுக்கும்,உள்ளத்துக்கும் தெளிவைக் கொடுக்கக்கூடியது என்ற நம்பிக்கை நிலவுகிறது,புத்தர் தியானம் செய்து ஞானம் பெற்ற போதிமரம் கூட அரசமரமேயாகும்.அரச மரத்தின் காற்றுக்கு கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துளிர் இலையை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட புண்கள் ஆறும்.
இலைத்தளிரை அரைத்து எருமைத்தயிருடன் சாப்பிட்டு வர தொண்டை வறட்சி,தொண்டப்புண்கள் ஆறும்.சீதபேதியும் குணமாகும்.
வேர்ப்பட்டையை காய்ச்சி பாலுடன் அருந்தி வர சொறி,சிரங்கு,நீர் எரிச்சல் ஆகியவை நீங்கும்.
மரப்பட்டையை எரித்து தூளாக்கி சாம்பலை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து பூசி வர சொறி,புண் ஆகியவை குணமாகும்.
அரசம் பழத்தை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு ஒரு சிட்டிகை எடுத்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்,விந்தணு எண்ணிக்கை பெருகி ஆண்மலடு தீரும்.
காய்ச்சலின் போது அரச இலைக் கொழுந்தினை காய்ச்சிய குடிநீரை குடித்து நிவாரணம் பெறலாம்.
இலைக்கொழுந்தை பாலுடன் சாப்பிட்டு வர பெண்மலடும் அகலும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக பிராணவாயுவை அதிகம் வெளியிடும் மரம் என்பதால் இதை ஊருக்கு பொதுவான இடங்களில் வளர்ப்பது நம் சுற்றுச்சூழலை மேம்படுத்திட உதவும்.ஒவ்வொரு அரசமரமும் ஒரு பிராணவாயுத் தொழிற்சாலை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக