*காந்தியும் -பகத்சிங் தூக்கும் *
பகத்சிங் சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்
1928ல்பிரிட்டிஷ் அரசால் அனுப்பப்பட்ட சைமன் கமிஷன் லாகூர் நகரத்திற்கு வந்தது. "சைமன் கமிஷனே திரும்பிப் போ" என்று லாலா லஜபதிராய் தலைமையில் போராட்டம் நடந்தது.
சாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரி, 62 வயது முதியவரான லாலா லஜபதிராய் மீது பாய்ந்து அவரைத் தாக்கினான். அதனால் பாதிக்கப்பட்ட லாலா லஜபதிராய் மரணம் அடைந்தார். லாலா லஜபதிராய் சாவுக்குக் காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை பகத்சிங் சுட்டுக் கொன்றார். அது மட்டுமல்லாமல் டெல்லி சட்டசபைக் கூட்டத்தின் மையமண்டபத்தில் வெடிகுண்டுகளை வீசினான்.
பகத்சிங் உள்பட அவரது நண்பர்கள் 24 பேர் கைதானார்கள்.பகத்சிங் மீது பிரிட்டிஷ் அரசைக் கவிழ்க்க சதி செய்தது லாகூர் போலீஸ் அதிகாரி சாண்டர்சை கொலை செய்தது.ஆயுதம் ஏந்தி போராடியது - ராஜத்து ரோகம் என குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று தீர்ப்பை அறிவித்தார்கள்.அதன்படிபகத்சிங்
தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார்.
கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்த நிகழ்வு இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக