தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 செப்டம்பர், 2015

பைரவர்


பைரவர் பற்றிப் பார்ப்போம்

வடகிழக்கு ஈசான்ய திசையில் இருப்பவர் சிவன் கோவிலின் காவல் தெய்வம் பைரவர் ( ஷேத்திரபாலகர்) உலகைப் காப்பது உலக ஸ்ருஷ்டியை விளையாட்டாக கொண்டிருப்பது ஆகும்

வீர செயல்களை செய்வதற்காக சிவன் ஏற்ற திருக்கோலங்களில் வேகவடிவத்தில் ஒன்று உயிர்கள் செய்த வினைகளை நீக்கி அருள் செய்வர் பைரவரை வழிபட்டால் நவக்கிரகதோசம் நீங்கும்

பைரவர் மகிமை

பைரவர் வழிபாடு பகை அச்சங்களை ( பயங்களை) நீக்கி வெற்றிகள் குவிய வழி செய்யும் வழிபாடாகும்

பைரவர் என்ற சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பெயர் சிவாலயத்தில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும் இரவில் அர்த்த ஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் சன்னதி சாவிகளை பூட்டி பைரவர் திருவடியில் சமர்ப்பித்து பூட்டுவது வழக்கம் ஆகும்

பைரவர் கோல தத்துவம்

அகந்தைக் கொண்டு தவறு செய்பவர்கள் தேவர்களாகவே இருப்பின் இறைவன் ( சிவபெருமான்) தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்து நல்லவர்கள் போற்றி காப்பாற்றப்படுவார்கள் என்பதே பைரவர் திருக்கோலம் உணர்த்தும் தத்துவம் ஆகும்

சிறப்புத் தலம்

சீர்காழி, காசி ஆகும்

பைரவர் அமையும் இடம்

பூஜை வட கிழக்கு திசை ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அந்திக்காலம் மற்றும் அர்த்தசாம பூஜை விசேசம் ஆகும்

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை அஷ்டமி திதி ( அமாவாசைக்கு 8 ம் நாள்) தேய்பிறை அஷ்டமி திதி ( பௌர்ணமியிலிருந்து 8 ம் நாள்) என இரு அஷ்டமி திதிகள் வருகின்றன

பைரவர் சனி குரு திசைகளுக்கு பார்த்தால் சனிக்கு குருவாகவும், ஆதி தெய்வமாகவும் பைரவர் விளங்குகிறார் ஆகும்

காலபைரவர் சிறப்பு

நவகிரகங்களும், ராசிகளும், நட்சத்திரங்களும் கொண்ட காலத்தை பைரவர் ஆளுகிறார்

பைரவர் 8 பெயர்கள்

1. சண்டன் 2. ருத்ரன் 3. சோமன் 4. கபாலி 5. சங்கரர் 6. கோதண்டன் 7. வீதன் 8. சித்ராங்கதம் போன்ற அட்ட பைரவர்கள் உள்ளார்கள் ஆகும்

திருக்குளம் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புத் தலம்

திருவாரூர் 30 ஏக்கர், மன்னார்குடி ராஜகோபாலசாமி 1158 × 837, மதுரை மாரியம்மன் கோவில் 1000 × 959, குடந்தை மகாமக குளம், மைலாப்பூர் குளம், திருக்கணபுரம் குளம் போன்றவை ஆகும்

இரதம் ( தேர்) பற்றிப் பார்ப்போம்

ஆலயம் என்னும் சின்னத்தின் மற்றொரு பகுதியாக ஓடுதல் என்னும் செயலாக ரதம் ( தேர்) உடல் தத்துவத்தை விளக்கும் சரீரத்தின் இயல்புகளை ரதத்தில் அமைப்பது உண்டு ஒன்று நிலைத்திருக்கும் சின்னம் ஆகும் மற்றது இயங்குகின்ற சின்னம் ஆகும் ஈசன் தேரில் ( இரதத்தில்) சோமஸ்கந்தர் கோலத்தில் பவனி வருகிறார்

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக