குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். எனினும் நிறைய பெற்றோர்கள் அதை சுகமாக நினைக்காமல் சுமையாகவே கருதுகின்றனர்.
குழந்தைகளை வளர்ப்பது என்பது எளிதான காரியம் இல்லை. அதிலும் குழந்தைகளின் உணவு விசயத்தில் பெற்றோர்கள் பெரும் போராட்டத்தை சந்திக்கிறனர்.
எந்த உணவை கொடுத்தாலும் சாப்பிடவில்லை என்று குழந்தைகள் மீது குற்றம் சுமத்துக்கின்றோம்.
உண்மையில் தவறு நம் மீதுதான் என்பதை மறந்துபோகிறோம். ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவது மூலம் எளிதாக அவர்களை ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடவைக்கலாம்.
முதலில் குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை சமைத்துகொடுங்கள். பின்னர் அவர்களுக்கு பிடிக்காத அதே சமயத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அதனுடன் சேர்த்து பரிமாறுங்கள்.
சில குழந்தைகள் தாய் அருகில் இருந்தால் தான் சாப்பிடும். இது போல் சில குழந்தைகள் பாட்டி, தாத்தா போன்றோர்கள் மீது பாசம் வைத்திருக்கும். எனவே அவர்கள் அருகிலிருக்கும் போது உணவு பரிமாறினால் அடம் பிடிக்காமல் உண்ணுவார்கள்.
அடுத்ததாக, அளவான உணவையே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். அவர்கள் விரும்பினால் திரும்பவும் பரிமாறலாம்.
குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்காத உணவுகளை சாப்பிடுமாறு வற்புறுத்த வேண்டாம். மேலும் உணவு உண்ணும் நேரத்தில் நொறுக்குத்தீனிகள் தருவதையும் தவிர்க்க வேண்டும்.
அதேவேளையில் உணவு உண்ட பின் தண்ணீர் அல்லது பழச்சாறு ஆகியவற்றை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஒரே உணவு வகையை கொடுக்காமல் புதிது புதிதாக செய்துகொடுங்கள்.
இது அவர்களுக்கு உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். விளையாட்டு என்றால் வீடியோ கேம் இல்லை.
அவர்களின் உடல்களுக்கு புத்துணர்ச்சி தருகிற வெளிப்புற விளையாட்டுகளை கற்றுக்கொடுங்கள். இது அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு அவர்களின் பசியையும் அதிகரிக்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக