தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட விண்டோஸ் 8 அம்சங்கள்

தொடு உணர்திரை தொழில்நுட்பத்துடன் அறிமுகமாக விண்டோஸ் 8ல் ஒருசில வசதிகள் பயனர்களை எரிச்சலடைய செய்ததால், எதிர்பார்த்தபடி  வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் பயனர்களின் பிரச்னைகளை அறிந்த மைக்ரோசாப்ட் தன் தவறுகளை உணர்ந்து, புதியதாக அறிமுகமான விண்டோஸ் 10 சிஸ்டத்தில், அதற்கான பரிகாரத்தை மேற்கொண்டது.
எப்படியும், தன் பயனாளர்களைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் அனைத்து அம்சங்களையும் அலசி, பல வழிகளில் இந்த இலக்கினை அடைய, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை வடிவமைத்து அளித்துள்ளது.
Start Menu: விண்டோஸ் 8 சிஸ்டத்தை ஆன் செய்தவுடன், நேராக அதன் Start Screen  திறக்கப்படும்.
உங்களிடம் டேப்ளட் பி.சி. அல்லது மொபைல் போன் இருந்தால், இது சரியானது என்ற எண்ணம் ஏற்படும்.
ஆனால், பாரம்பரியமாக நாம் பயன்படுத்திப் பழகிப் போன, கீ போர்ட் மற்றும் மவுஸ் இணைத்துச் செயல்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரில் இந்த ஸ்கிரீன் தோற்றம் எரிச்சலை ஏற்படுத்தியது, ஏனெனில் நாம் வழக்கமாக பயன்படுத்தி வந்த Start Ment அதில் இல்லை.
எனவே விண்டோஸ் 10ல் Start Menu இணைக்கப்பட்டு விட்டது, அத்துடன், விண்டோஸ் 8ல் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட செயலிகளுக்கான மற்றும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் டைல்ஸ் கட்டங்களும் தரப்பட்டுள்ளன.
Charms Bar இடத்தில் Action Center: விண்டோஸ் 8 வெளியானபோது, அதனை வடிவமைத்தவர்கள் தாங்கள் தரும் மிக அருமையான வசதி என்று சார்ம்ஸ் பார் வசதியைக் குறிப்பிட்டனர். இது தொடு உணர் திரை உள்ள சிஸ்டங்களுக்குத் தான் சரியானதாக இருந்தது.
ஆனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வைத்திருந்தவர்கள், தானாக எழுந்து வந்து இம்சை தருவதாகவே உணர்ந்தனர்.
எனவே விண்டோஸ் 10ல் இந்த வசதி நீக்கப்பட்டு, Action Center தரப்பட்டுள்ளது. இங்கு இமெயில், ட்விட்டர், சிஸ்டம் குறித்த அறிவிப்புகள் மற்றும் பிற அப்ளிகேஷன் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.
குறிப்பாக இதனை நாம் வேண்டும் என்றால் பார்க்கவும், விரும்பாத நேரத்தில் அழுத்தி வைக்கவும் கீ தரப்பட்டுள்ளது.
அத்துடன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இரண்டு பதிப்புகளுக்குப் பதிலாக, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10ல், எட்ஜ் பிரவுசரைத் தந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக