தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

விநாயகர் சிலைகளை ஏன் நீரில் கரைக்கிறார்கள்?

விநாயகர் சிலைகளை ஏன் நீரில் கரைக்கிறார்கள்? 
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை அள்ளி எடுத்து சென்று விடும். அதனால் அவ்விடத்தில் நீா் நிலத்தில் தங்காமல் ஓடிக் கடலை சென்றடைந்து விடும்.இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும். 
 இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள் நம் முன்னோர்கள் !
நீர் ஆற்றில் தங்குவதற்கு கெட்டியான களி மண்ணை ஆற்றில் கரைத்தால் அந்த மண் ஆற்றில் கரைந்து தங்கி ஆற்று நீரை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்திவிடும் என்பது அவர்களின் கணிப்பபானது . அதனால்த்தான் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று களி மண்ணால் ஆன பிள்ளையார் சிலைகளை செய்து அவற்றை வணங்கி வழி பாடு செய்து விட்டு ஆற்றில் கரைத்து வந்துள்ளார்கள்.
இப்படி ஓவ்வொரு வீட்டிலும் இருந்து களி மண்ணால் உருவாக்கபட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பொழுது அந்த இடத்தில் ஆற்றின் அடியில் மண்ணின் நெகிழ்வு தன்மை மாறிவிடுகிறது. 
 
விநாயகர் சதுர்த்தி அன்று உருவாக்கப்படும் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகள் ஆரம்பத்தில் ஈரப்பதமாக இருப்பதால் அதை அன்றே கரைத்தால் ஈரமான மண்ணும் ஆற்று நீரில் அடித்து செல்லப்படும்  வாய்ப்புள்ளதால் சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாளில் சிலையின் மண் நன்றாக கெட்டியாகியிருக்கும். அதனால் அப்பொழுது கரைக்கும் பொழுது மண் ஆற்றி கரைந்து அப்படியே நீரின் அடியில் படிந்து விடும்.அதனால் நீர் அந்த இடத்தில் தடுக்கபட்டு களிமண்ணால் உறிஞ்சபட்டு நிலத்தடியில் தங்கிவிடும். ஆற்றில் நீர் தங்கிட களிமண் உள்ள இடத்தில் நீா் கீழே பூமியுள் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும்.
அதனால் தான் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள் !
இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும். இதனால் தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்துள்ளார். 
 ஆனால் இன்று ஆற்று நீர் நிலைகளில் நீர் இல்லாததால் ஏதாவது ஒரு நீர் நிலையில் கரைத்தக வேண்டும் என்ற சடங்கிற்காக காலத்திற்கேற்ப மாறி விட்ட கலர் கலரான ரசாயணம் பூசப் பட்ட விநாயகர் சிலைகளை சம்பிரதயாதிற்காக ஆரம்பித்து விட்டார்கள் அறப்படித்த அறிவாளிகள் .
Sivarajah Gajan

இதன் மூலம் கடல் நீரில் இரசாயனத்தை ஊற்றி அங்குள்ள உயிர்களுக்கு கொடுமை செய்கின்றார்கள் என்பதை சொல்லியா தெரிந்துகொள்ள வேண்டும்!

என்ன சொல்ல இந்த படித்த ,படிக்காத மூடர்கள் செயலை !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக