தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

புகலிடம் கோரி வரும் அகதிகளின் அடிப்படை உரிமைகள் என்ன? அகதிகளுக்கான விரிவான தகவல்கள்

புகலிடம் கோரி வரும் அகதிகளின் அடிப்படை உரிமைகள் என்ன என்பது தொடர்பான விரிவான ஒரு ஆய்வு தகவலை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 24,000 அகதிகளுக்கு குடியேற்ற அனுமதி வழங்கப்படும் என பிரதமர் பிராங்கோயிஸ் ஹோலண்டே ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆனால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அண்மையில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இருக்க, பிரான்ஸ் நாட்டில் குடியேற வரும் அகதிகளின் அடிப்படை உரிமைகள் என்ன என்றும், அரசு ஒரு அகதிக்கு என்னென்ன வசதிகள் செய்து தரவேண்டும் என்ற தகவல்களை பிரான்ஸில் உள்ள Terre d'Asile என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிற்கு வரும் அகதிகளின் அடிப்படை உரிமைகளை இப்போது பார்க்கலாம்.
பிரான்ஸில் எத்தனை ஆண்டுகள் தங்கலாம்?
பிரான்ஸ் நாட்டில் குடியேற வரும் அகதிகளின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக இருந்தால், அவர்கள் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்குவதற்கான குடியிருப்பு அனுமதி வழங்கப்படும். இது குறிப்பிட்ட அகதியின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
இதை தவிர, அகதிகளுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான உப பாதுகாப்பு வசதிகள் செய்து தருவதுடன் அவர்களுக்கு ‘அகதிகள்’ என்ற தகுதியும் வழங்கப்படும்.
குடியிருப்பு பகுதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை:
பிரான்ஸ் நாட்டில் ஒரு அகதி விரும்பும் பகுதியிலேயே தங்க வைக்க வேண்டும் என்ற வசதி இருந்தபோதிலும், அது பெயரலவிலேயே இருக்கிறதே தவிர அதனை நடைமுறைப்படுத்த இயலவில்லை. அதிக எண்ணிக்கையில் அகதிகள் குவியும்போது அதிகாரிகள் நிர்ணயம் செய்யும் பகுதிகளிலேயே தங்க வேண்டும். ஆனால், துரதிஷ்ட்டவசமாக இடப்பற்றாக்குறை காரணமாக சில அகதிகள் நண்பர்கள் வீட்டிலும் அல்லது வீதிகளிலும் தங்க நேரிடுகிறது.
எனினும், இந்த நிலைமை சீரமைக்கப்பட்டு, ஒரு அகதிக்கு 1,000 யூரோக்கள் என உள்ளூர் அதிகாரிகளே வசதியான தங்கும் இடங்களை ஏற்பாடு செய்து தருகின்றனர்.
அகதிகளுக்கு இருக்கும் பலன்கள் மற்றும் சலுகைகள்:
பிரான்ஸ் நாட்டில் குடியேறிய ஒரு நபருக்கு அகதி என்ற அந்தஸ்த்து கிடைத்தவுடன், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் தங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும்.
பின்னர், ஒரு அகதியின் குடும்ப சூழ்நிலையை பொறுத்து அவருக்கு மாதந்தோறும் 524 யூரோக்கள் வழங்கப்படும். அகதி அந்தஸ்த்து பெறாத புலம்பெயர்ந்தவர்களுக்கு 320 யூரோக்கள் வழங்கப்படும். மேலும், அதிகாரிகளால விஷேட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு மாதம் 90 முதல் 720 யூரோக்கள் வரை அரசு நிதியுதவி அளிக்கும்.
பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் உரிமை:
பிரான்ஸ் நாட்டில் குடியேற்ற அனுமதி பெற்று, அகதி என்ற அந்தஸ்த்து கிடைக்க பெற்ற ஒவ்வொரு அகதியும் அடுத்த சில ஆண்டுகளில் பிரான்ஸ் குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்ய உரிமை உண்டு.
ஆனால், பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கு நீண்ட வருடங்கள் எண்ணற்ற தடைக்கற்கல் உள்ளன. எனினும், அதிக வருடங்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக, பிரான்ஸ் நாட்டு மக்களுடன் ஒருங்கிணைந்து பழகி, பிரான்ஸ் மொழியை சரலமாக பேசுவதுடன் ஒரு நல்ல பணியில் இருந்தால், அவர்களுக்கு நிச்சயமாக குடியுரிமை வழங்கப்படும்.
மொழி வகுப்புகள்:
பிரான்ஸ் நாட்டு மக்களுடன் ஒருங்கிணைத்து பழகுவதற்கும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும் மொழி ஒரு தடையாகவே இருந்து வருகிறது. ஆனால், மொழி வகுப்புகளை ஏற்படுத்திக்கொள்ள அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. எனினும், பிரான்ஸில் உள்ள சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அகதிகளுக்கு மொழி வகுப்புகளை ஏற்பாடு செய்து தருகின்றன.
அகதிகளின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் உரிமை:
பிரான்ஸ் நாட்டில் உள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளை அந்நாட்டு பள்ளிகளில் சேர்க்க அடிப்படை உரிமைகள் உள்ளன. கல்வியை பொறுத்தவரை ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்குள்ளாகவே குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அகதிகளின் சுகாதார சிகிச்சைகளை பெறும் உரிமை:
பிரான்ஸ் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு Aide Medical d’Etat என்ற திட்டத்தின் கீழ் உடல் சார்ந்த சுகாதார சிகிச்சைகளை பெறும் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வமாக குடியிருப்பு அனுமதி பெற்ற பிறகு, எந்தவித கட்டணமும் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.
அகதிகளின் வேலை வாய்ப்பு உரிமை:
பிரான்ஸ் நாட்டில் குடியேற்ற அனுமதிக்காக காத்துள்ளவர்கள் பணிக்கு செல்ல சட்டப்பூர்வமாக அனுமதி கிடையாது.
எனினும், ஒரு வருடத்திற்கும் மேலாக குடியேற்ற அனுமதி கிடைக்காமல் இருக்கும் நபர்கள் சில குறிப்பிட்ட அனுமதி பெற்ற பிறகு பணிக்கு செல்லலாம். ஆனால், அகதி என்ற அந்தஸ்த்து பெற்ற ஒரு நபர் அந்த நாளிலிருந்தே பணிக்க செல்லவதற்கான வசதிகளும் பிரான்ஸ் நாட்டில் நடைமுறையில் உள்ளன என Terre d'Asile என்ற அந்த தொண்டு நிறுவனம் தனது ஆய்வு தகவலில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக