தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 செப்டம்பர், 2015

உயிரைக் குடிக்குமா வாழைப்பழம்?



ஒருநாளைக்கு அதிகளவில் வாழைப்பழத்தை உட்கொண்டால் ஆபத்தாகி விடும் என்பதால் பலரும் உண்ணத் தயங்குகின்றனர்.
வாழைப்பழங்களில் உள்ள ‘பொட்டாசியம்’ இதயம், சிறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானது தான்.
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரு நாளைக்கு ஆறு வாழைப்பழம் மட்டுமே உண்ணலாம் என்றும், ஏழாவது பழம் உயிருக்கே ஆபத்தாகும் என பலர் நம்புகின்றனர்.
ஒரேநேரத்தில் 400 பழங்களை உண்டால் மட்டுமே, அதாவது அவற்றிலிருக்கும் பொட்டாசிய சத்து நேடியாக சிறுநீரகத்தை தாக்கினால் மட்டுமே உயிரிழப்பு ஏற்படும்.
ஆனால், அதை அடைவதற்கு முன் போகும் வழியிலேயே, குடல் பாதி பொட்டாசியத்தை உறிஞ்சிவிடும்.
அதனால் 400 பழங்களை ஒன்றாய் உட்கொண்டாலும் உயிரிழப்பு ஏற்படாது என லண்டனில் உள்ள கிங் நிலையத்தின் கேத்தரின் கொலின்ஸ் என்னும் டயட்டிஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிலர் வாழைப்பழத்தால் கதிரியக்க விஷம் பரவுவதாக கருதுகின்றனர், நமக்குள்ளும் கதிரியக்கம் இருக்கிறது.
கதிரியக்க விஷம் பரவ ஒரு வேளைக்கு பத்து லட்சம் வாழைப்பழங்களை உண்ண வேண்டும்.
ஒரு நாளில் 274 வாழைப்பழங்களை தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு உட்கொண்டுவந்தால் மட்டுமே கதிரியக்கத்துக்கான அறிகுறிகள் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக