தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 செப்டம்பர், 2015

சூரிய வெளிச்சத்தின் மூலம் தானாகவே சார்ஜ் ஆகும் மின்கலங்கள்!

சம காலத்தில் சூரிய வெளிச்சத்தினை மின் சக்தியாக மாற்றும் சூரியப் படலங்கள் பாவனையில் இருப்பது அனைவரும் அறிந்ததே.
எனினும் இவ்வாறு மாற்றப்படும் மின்சக்தியை சேமிப்பதற்கு தனியான மின்கலங்கள் பயன்படுத்தப்படும்.
ஆனால் தற்போது சூரிய ஒளியைப் பயன்படுத்தி தானாகவே சார்ஜ் ஆகக்கூடிய lithium-Ion மின்கலங்களை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒளி ஊடுபுகவிடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மின்கலம் கடந்த மாதம் டோக்கியோவில் இடம்பெற்ற வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இம் மின்கலத்தினை கண்டுபிடிப்பதற்கான அடித்தளம் 2013 ஆம் ஆண்டு Kogakuin பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரைவுரியாளரான Mitsunobu Sato என்பவரால் இடப்பட்டுள்ளது.
3.6 வோல்ற் மின்னழுத்தத்தினைக் கொண்ட இம் மின்கலம் 20 தடைவைகள் வெற்றிகரமாக சார்ஜ் செய்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக