தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, September 5, 2015

மாணவர்கள் ஒரு நாட்டின் வருங்கால தூண்கள்; ஆசிரியர்களே அதன் கட்டுமானப் பணியாளர்கள் (வீடியோ இணைப்பு)



மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற இந்திய கலாச்சார கோட்பாட்டில், தெய்வத்துக்கு முன்பாகவும் முக்கியமாகவும் மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள்தான் குருவான இந்த ஆசிரியர்கள்.
ஆசிரியர் தினம் கொண்டாடுவது, ஒரு நாட்டுக்கு அவசியமானது, ஆரோக்கியமானது.
ஆசிரியர் தினம் கோண்டாடும் நோக்கம்
ஆசிரியர்கள் தங்களது பொறுப்பு மற்றும் புனிதத்தை உணரவும். மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட்ட இந்த சமுதாயமும், ஆசிரியர்கள் அருமை அறிந்து மதிப்பு, நன்றியுணர்வை நடவடிக்கைகளில் வெளிப்படுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதோடு மட்டும் நிற்பதில்லை. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது.
வருங்காலத்தை எப்படி வெற்றிப்படிகளாக்கி முன்னேறுவது. குறிப்பாக நல்ல குடிமகனாக இருப்பதற்கும் வழி காட்டுகிறார்.
தன் பிள்ளைகளுக்கு சொல்கிற நல்ல விடயங்களை, ஆசிரியர் மறைக்காமல் மாணவர்களுக்கும் சொல்வார். காரணம், மாணவர்களும் ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக வந்த பிள்ளைகள்தான்.
ஆசிரியர் தினம் உருவானது
ஆசிரியர் தினம் உருவானதில் இந்தியாவில் ஏதும் திட்டமிடல் இல்லை. ஆசிரியராக இருந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன். இந்திய ஜனாதிபதி ஆனார்.
தனது மணவர்களுக்கு பிடித்துப்போன நல்ல ஒரு ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அதனால், அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 5 ம் திகதியை மாணவர்கள் கொண்டாட விரும்பினர். அதற்காக ஜனாதிபதியாக இருந்த அவரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
அதற்கு அவரும் கொண்டாடுங்கள் ஆனால், என்னுடைய பிறந்தநாளாக மட்டும் கொண்டாடாமல், அனைத்து ஆசிரியர்களின் தினமாக கொண்டாடுங்கள் என்றார்.
அதுபோலவே, 1962 செப்டம்பர் 5 ம் திகதியை ஆசிரியர் தினமாகவே கொண்டாடினர். இதுவே ஆசிரியர் தினம் இந்தியாவில் உருவான வரலாறு.
ஒவ்வொரு நாடும் வெவ்வேறு திகதியில் கொண்டாடுகின்றன.
கனடா, ஜேர்மன் உள்ளிட்ட 20 நாடுகள் அக்டோபர் 5 ம் திகதியிலும், எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட 11 நாடுகள் பிப்ரவரி 28 ம் திகதியிலும் ஆசிரியர் தினத்தை கொண்டாடுகின்றன.
தன் பணியில் அக்கறை உள்ள ஒரு ஆசிரியர், தன் மாணவன் இல்லாதவனாக நேர்ந்தாலும், பொல்லாதவனாகக் கூடாது என்றே நினைப்பார்கள். அதற்கான அறிவையே விதைப்பார்கள்.
எல்லா துறைகளிலும் இருப்பதுபோல, ஆசிரியர்களிலும் சில கறுப்பாடுகள் இருக்கலாம். அது அந்த ஆசிரியர்களுடைய தனிப்பட்ட அழுக்கு. அதனால், ஆசிரியர் பணிக்கு இல்லை இழுக்கு.
ஆசிரியர்கள் பெருமை பேசும் இந்த தினம் கூட சில நஞ்சு மனங்களையும் நறுமணமக்கும் என்பது உறுதி.
மாணவர்கள் ஒரு நாட்டின் வருங்கால தூண்கள்; ஆசிரியர்களே அதன் கட்டுமானப் பணியாளர்கள்.
கடவுள் இந்த உலகில் எதுவாக இருக்கிறார் என்ற நுட்பமான கேள்விக்கு எல்லோருமே ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதிலை ஒரு ஞானி சொன்ன பதில், அது நமக்கு ஏற்படும் ’அனுபவங்களில் இருக்கிறார்’ என்பதுதான்.
அப்பேரு பெற்ற அனுபவங்களை கூட நல்ல ஆசிரியர்கள் என்றே பெருமையோடு அழைக்கிறோம்.

No comments:

Post a Comment