தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, September 30, 2015

சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடலாமா?

சாப்பிடும் முறைகளும், சாப்பிட்ட பின்னர் என்ன செய்யக்கூடாது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது
உணவு வகைகள் ஜீரணமாவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும்.
சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது
உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ஜீரண உறுப்புகள் முறையாகச் செயல்பட, போதிய ரத்தம் கிடைக்காது.
சாப்பிட்டு, 3 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், ஜீரண உறுப்புக்களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.
சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது
இதனால், கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது.
நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வலுவிழந்து விடும். குளித்தால் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தான் குளிக்க வேண்டும்.
உருளைக் கிழங்கு சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும்.
சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடலாமா?
சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.
இதனால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும்.
உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உண்ட உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.
சாப்பிட்ட உடனே பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும்.
சாப்பிட்டு, 1-2 மணி நேரம் கழித்துதான் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு, 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment