தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

புதிய வசதியுடன் வெளியாகும் ஆப்பிள் Siri

குரல் வழி கட்டளைகள் மூலம் ஆப்பிள் சாதனங்களை இயக்கும் வசதியினை தரும் அப்பிளிக்கேஷன் ஆன ஆப்பிள் Siri இன் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது அண்மையில் பொதுப் பாவனைக்காக வெளியிடப்பட்ட iOS 9.1 பீட்டா பதிப்புடன் இணைத்து இந்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது பல்வேறு குரல்களையும் இனம் கண்டு செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
காரணம் இதற்கு முன்னை பதிப்புக்களில் பலரது குரல்களை இந்த அப்பிளிக்கேஷன் முறையாக இனம் கண்டு செயற்படாத குறை காணப்பட்டிருந்தது.
இவ்வாறு ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட குரல்களை அடையாளம் காட்டுவதற்கு General > Siri > Allow 'Hey Siri' இனுள் உள்ள வசதியினை செயல்படுத்த வேண்டும்.
மேலும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இன்னும் ஓரிரு வாரங்களில் iPhone 6s மற்றும் iPhone 6s Plus உடன் இணைத்து அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக