இரத்தத்தில் தொற்றக்கூடிய எந்த வகை நோயினையும் கண்டறியக்கூடிய நனோ பச் (nano-patch) ஒன்றினை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை மிகவும் நுண்ணிய ஊசிகளின் ஊடாக விரைவாகவும், எவ்வித வலியும் ஏற்படாமலும் குருதியில் செலுத்த முடியும்.
இவ்வாறு செலுத்துவதன் ஊடாக மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களையும் இலகுவாகக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் மனிதர்களில் பரீட்சித்துப்பார்க்கப்படவுள்ளதுடன் இது வெற்றியளித்தால் 2017 ஆம் ஆண்டளவில் இந்த தொழில்நுட்பமானது மருத்துவ உலகில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக