தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 செப்டம்பர், 2015

உடல் எடையை குறைக்கும் அறுவை சிகிச்சை! ஏற்படும் நன்மைகள் என்ன?

உடல் எடை குறைப்பு சிகிச்சை, மருத்துவ உலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திறந்த நிலை அறுவைச் சிகிச்சை ("ஓபன் சர்ஜரி') முறையில் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தற்காலத்தில் இது லாப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படுகிறது.
மேலும் சிகிச்சையின் காய அளவு மிக மிகச் சிறிய அளவில் ஏற்படுவதால் நோயாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது.
அறுவைச் சிகிச்சை மூலம் இரைப்பை மற்றும் அல்லது குடலின் பகுதிகளின் அளவு மாற்றி அமைக்கப்படுகிறது அல்லது உணவு உட்கொள்ளப்படும் பாதையின் ஒரு பகுதியில் உணவு செல்வது தவிர்க்கப்படுகிறது.
உடல் பருமன் பிரச்சனை அதிகமாக உள்ளவர்களுக்கு, உடல் எடை குறைப்பு மற்றும் அதன் நிரந்தர பராமரிப்பு என்பது பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை மூலமாகவே சாத்தியமாகிறது.
உடல் எடை குறை அறுவை சிகிச்சையின் மூலம் உடலில் சில மாற்றங்களும் ஏற்படுகின்றன.
சர்க்கரை நோய் (ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ள நிலை) அதிகபட்சம் 85 சதவீதம் அளவுக்கு முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.
ரத்தத்தில் கொழுப்புச் சத்தின் அளவு 70 சதவீதம் அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. உயர் ரத்த அழுத்தம் 61.78 சதவீதம் அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.
தூங்கும் போது ஏற்படும் மூச்சுதிணறல் 85.7 சதவீதம் அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக