தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 செப்டம்பர், 2015

இதய நோயாளிகளுக்கு ஏற்ற பார்லி

பல்வேறு சத்துகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு அற்புத தானிய வகைதான் பார்லியாகும்.
தமிழில் வாற்கோதுமை என்று அழைக்கப்பட்டாலும் இது கோதுமை வகையை சார்ந்ததல்ல.
இன்றும் பல்வேறு இடங்களில் நோயுற்றவர்களுக்கு ஏற்ற உணவாக பார்லி கஞ்சி விளங்குகிறது.
உடல் எடை அதிகம் இருப்பவர்கள் பார்லி கஞ்சியை குடித்துவந்தால் உடலில் இருந்து தேவையற்ற நீர் வெளியேறி எடை குறையும்.
இதேபோல் சிறுநீர் தாராளமாகப் பிரியவும் இது உதவும். குடலில் உண்ண புண்களையும் ஆற்றும் ஆற்றல் உடையது பார்லி.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய எக்லாம்சியா பிரச்னைக்கு பார்லி சிறந்த மருந்தாகும். ரத்தத்தில் புரதத்தின் அளவு அதிகமாகி கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை பார்லி நிவர்த்தி செய்கிறது.
முக்கியமாக இது இதய நோயாளிகளுக்கு மிக சிறந்த உணவாகும். இதில் உள்ள ப்ரோபியானிக் என்னும் அமிலம் கொலஸ்ட்ராலை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
மேலும் பார்லியில் உள்ள பீட்டா க்ளூக்கோன், பித்த நீருடன் சேர்ந்து கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது.
எனவே இதய நோயாளிகள் அரிசி உணவுகளுக்கு பதில் பார்லியை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக