தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 செப்டம்பர், 2015

பிரியமான இன்பங்கள் தரும் பிரிந்திருக்கும் காதல்!

பிரிவு இல்லை என்றால் காதலில் சுவாரசியம் இருக்காது.
அதாவது, ஒருவரையொருவர் மனதார காதலிக்கும்போது, இடையில் சிறு பிரிவினையை சந்தித்தால் அந்த பிரிவானது அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துவதை விட, அதிகளவு இன்பத்தையே ஏற்படுத்தும்.
காதலர்கள் ஒன்றாக இருக்கும்போது ஒருவரையொருவர் அதிகம் புரிந்துகொள்வதை விட, பிரிந்து இருக்கும்போது பல மடங்கு அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
ஒன்றாக இருக்கும் போது, நாம் பல சமயங்களில் திட்டமிடுதலைப் பற்றி யோசிப்பதே இல்லை.
ஆனால் தூரம் தள்ளி இருக்கும் போது, நம் வாழ்க்கையிலும், எதிர்காலம் பற்றிய பயம் நமக்கு திட்டமிடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும். இத்தகைய பயம் நல்லதே ஆகும்.
காதலியை பிரிந்திருக்கும்போது, அவள் பெயரை மற்றொரு இடத்தில் கேட்டாலே மனதில் ஒருவித படபடப்பான இன்பம் வந்துபோகும்.
தொலைதூர காதலில் நீங்கள் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் காதலும், அக்கறையும் அன்பும் மட்டுமே எதிரொலிக்கும்.
அதனால், இங்கு சண்டை சச்சரவுகளுக்கு இடம் இருக்காது.
தினம் தினம் சந்தித்து காதலை வெளிப்படுத்தும்போது காதலும், காதலியும் அழகாகத் தெரிவாள், ஆனால் பிரிவில் இருக்கும்போது காதல் மட்டுமே அழகாகத் தெரியும்.
பல நாட்கள் பிரிந்திருந்து விட்டு, பின்னர் சந்தித்து நாம் வெளிப்படுத்தும் அன்புக்கு விலைமதிப்பில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக