தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

சமச்சீர் உணவு பற்றி தெரியுமா?

சமச்சீர் உணவு பற்றி பலரும் தெரிந்திராமல் அன்றாட உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், சரிவிகித உணவு என்பது காலை மற்றும் இரவு வேலைகளில் குருணை தானியங்களில் செய்யப்படும் கஞ்சி, அடை, களி போன்றவற்றைச் சாப்பிடலாம். உணவில் அதிகக் கொழுப்பு சேராதிருக்க, தோல் நீக்கிய இறைச்சியே சமச்சீரில் இடம்பெறும்.
எண்ணெயில் பொரித்த காய்கள் எதுவும் சமச்சீரில் இடம் பெறாது. ஆவியில் வேகவைத்த உணவுகளில் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது மட்டுமே சமச்சீர்.
மிகவும் பொடியாக நறுக்கிய காய், கீரை, கனிகளில் சத்துக்கள் வெகுவாகக் குறைந்துவிடும். பெரிய அளவில் நறுக்கியதாக இருக்கும்.
உருக்கிய நெய், ஆடை, கொழுப்பு நீக்கிய நீர்மோர் நல்லவை. சப்பாத்தி குருமா, சப்பாத்தி பருப்பு, சப்ஜி சமச்சீர் உணவுதான். ஆனால், சப்பாத்தியுடன் சாஸ், ஜாம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
வயதுக்கேற்ற டயட்:
உடம்பை குறைப்பதற்காக பலரும் டயட் என்ற பெயரில் தங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால், தங்கள் வயதிற்கேற்றபடி டயட்டினை மேற்கொள்வது நல்லது.
0-1 முதல் வயது வரை:
இந்த வயதுதான் வளர்ச்சிக்கு ஆதாரம், தாய்ப்பால் அதிக ஆற்றலைத் தரும், கொழுப்பு, மாவுச்சத்து, புரதச்சத்துக்கள் நிறைந்த உணவைச் சாப்பிடக்கொடுக்க வேண்டும்.
1-13 வயது வரை:
வளர்ச்சிக்கு உதவும் பருவம் இது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
பால் காய்கறிகள், பழங்கள், அசைவ உணவுகள் சிறுதானியம், அரிசி, கோதுமை, கேழ்வரகு, பருப்பு மற்றும் பயறு வகைகளை உட்கொள்ளலாம்.
14-25 வயது வரை:
எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமான உணவுகள் தேவை, உடல் வளர்ச்சிக்குத் தேவையான நட்ஸ், பயறு, பருப்பு, பால் பொருட்கள் அசைவ உணவுகளை சாப்பிடலாம்.
25 வயதுக்கு மேற்பட்டோர்:
அனைத்து உணவுகளையும் சமச்சீரான அளவில் சாப்பிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக