உள்ளங்கையில் அடங்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் பல்வேறு வினைத்திறன்கள் மற்றும் துல்லியம் வாய்ந்த கமெராக்கள் இணைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி இவ்வாறிருக்கையில் அமெரிக்காவின் எரிசக்தி துறையானது உலகிலேயே அதிக வினைத்திறன் வாய்ந்த டிஜிட்டல் கமெராவினை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது.
3.2 ஜிகா பிக்சல்களை உடைய இக் கமெரா வடிவமைக்கப்பட்டதன் பின்னர் தற்போது சிலியிலுள்ள Large Synoptic Survey Telescope (LSST) எனும் தொலைகாட்டிக்கு இணையாக செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.2 ஜிகா பிக்சல் என்பது தற்போது பாவனையிலுள்ள 1 மெகாபிக்சல் கமெராவினை போன்று 3200 மடங்கு அதிக வினைத்திறன் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இக் கமெராவானது 2022 ஆம் ஆண்டில் இருந்து தனது செயற்பாட்டினை ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக