செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: வித்தியாசமான முறையில் கொண்டாடும் கூகுள் (வீடியோ இணைப்பு) !
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை கூகுள் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளது.
செவ்வாயில் உள்ள மலைப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும், தரைப்பரப்பிலும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீர் குளிர்காலத்தில் உறைந்து போய்க் காணப்படுகிறது, வெயில் காலத்தில் திரவ நிலைக்கு மாறி ஓடுகிறது.
இதுகுறித்து தகவல்களை நாசாவின் அறிவியல் இயக்குநரகத்தின் உதவி நிர்வாகியும், விண்வெளி வீரருமான ஜான் கிரின்ஸ்பெல்ட் வெளியிட்டுள்ளார்.
இது ஒரு மிக முக்கியமான முன்னேற்றம். இன்றளவும் செவ்வாயின் தரையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தண்ணீரானது குளிர்காலத்தில் உறை நிலையில் உள்ளது.
இந்த உறைநிலை தண்ணீரானது உப்புப் படிவத்துடன் காணப்படுகிறது. செவ்வாயின் பல பரப்புகளிலும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உப்பில் மெக்னீசியம் பெர்க்குளோரேட், மெக்னீசியம் குளோரேட், சோடியம் பெர்குளோரேட் ஆகிய வேதிப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. பூமியிலும் கூட இயற்கையாவே இந்த பெர்குளோரேட்டுகள் பாலைவனத்தில் காணப்படுகின்றன.
சில வரை பெர்குளோரேட்டுகள் ராக்கெட்டின் புரப்பல்லன்ட் ஆக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வசிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள், உயிர் வாழத் தேவையான வழிகள் உள்ளதா என்பது தொடர்பான ஆய்வுகளை நடத்த நாசா முடிவு செய்துள்ளது.
கொண்டாடும் கூகுள்:
இந்த வெற்றியை இணையதளங்களுக்கான தேடுபொறியில் (சர்ச் என்ஜின்) ஜாம்பவனாக விளங்கிவரும் ‘கூகுள்’ வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றது.
செந்நிற கிரகமான செவ்வாயை குறிப்பிடும் ஒரு உருண்டை வடிவத்துடன், அதில் தண்ணீர் இருப்பதை குறிப்பிடும் வகையில் ஒரு டம்ளரையும் தனது முகப்பு பக்கத்தின் இன்றைய ‘டூடுள்’ ஆக கூகுள் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
இந்த பக்கத்தை கிளிக் செய்தால் செவ்வாய் கிரகத்தில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்பான செய்தி தொகுப்புகளையும், செவ்வாயில் உயிரினங்கள் வாழ இயலும் என்பது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளையும் காண முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக