தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, September 7, 2015

ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறப்பான ஆலோசனை (சூப்பரான டிப்ஸ்)

இன்றைய நவீன காலத்தில் பலரும் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அக்கறை காட்டுவதில்லை.
இதன் காரணமாக பல்வேறு உபாதைகளினால் பாதிக்கப்படுகின்றனர்.
சத்தான உணவுவகைகள், சீரான உடற்பயிற்சி மற்றும் முறையான பழக்கவழக்கங்களினால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தண்ணீர் அருந்துங்கள்
உடல் என்பது கோயில் போன்றது, நாம்தான் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும், எனவே அதிகளவு தண்ணீர் அருந்துங்கள்.
இது நமது உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவை சமன் செய்ய உதவும்.
மேலும் உடலின் செயல்கள் சீராக நடைபெறவும் உதவும்.
முறையான தூக்கம்
அடுத்ததாக முறையான தூக்கம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும்.
தூக்கமின்மை பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்பதோடு விரைவில் முதுமை அடையச் செய்யும்.
எனவே தினமும் குறைந்தது 6 மணி நேர தூக்கமாவது அவசியம்.
தியானம் செய்யுங்கள்
அதேபோல் தியானம் செய்யுங்கள். இது எப்போதும் உங்கள் மூளைக்கு ஓய்வு தருவதுடன் உங்கள் மனதையும் அமைதியாக வைத்திருக்க உதவும்.
உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உடற்பயிற்சி என்றவுடன் கடினமானவைகள் என்று எண்ண வேண்டாம். படிகளில் ஏறுதல், அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுதல் போன்ற எளிய பயிற்சிகளே போதும்.
மேலும் வெறும் காலில் நடப்பது மற்றும் ஓடுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் உங்கள் பாதங்கள் மூட்டுகள் ஆகிய இடங்களில் உள்ள அழுத்தம் குறைவதாகவும் அவர்கள் கூறிகின்றனர்.
பழங்கள்
பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இது இயற்கையாக நமக்கும் கிடைக்கும் அனைத்து வைட்டமின்கள் மற்றும் சத்துகளையும் அப்படியே வழங்கவல்லது.
அதுபோல காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்த்துகொள்ளுங்கள். தினசரி உணவுகளில் 5 முதல் 9 வகையான காய்கறிகளை சேர்த்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காதலியுங்கள்
உங்கள் மனத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க, உங்களை நீங்களே காதலிக்க தொடங்குங்கள். அந்த காதல் உங்கள் உடல் நலத்தை பேனுவதற்கு உதவும்.
நேர்மறை எண்ணம்
அடுத்ததாக எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் பழகுவதை தவிர்க்க முயலுங்கள். ஏனெனில் அவர்களது எதிர்மறை எண்ணங்கள் உங்களையும் அவர்கள் பாதைக்கு அழைத்து செல்லும்.
மதுப்பழக்கம்
முக்கியமாக மது பழக்கத்தை இன்றே கைவிடுங்கள். மதுவினால் உங்கள் உடல் மற்றும் உள்ளம் இரண்டுமே பாதிக்கக்கூடும்.
உங்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளையும் அது குறைத்துவிடும். எனவே மதுவுக்கு ”பை” சொல்லிவிடுங்கள்.

No comments:

Post a Comment