தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 செப்டம்பர், 2015

சாப்பிட்டவுடன் பல் துலக்கலாமா? இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடலாமா?

நமது ஆரோக்கிய வாழ்க்கைக்கு இரண்டு நல்ல பழக்கவழக்கங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
சாப்பிட்டவுடன் பல் துலக்கலாமா?
பழங்கள்,குளிர் பானங்கள்,ஒயின்,அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும்.
உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பிரஷ் கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும்.
சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும்,அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்குஎந்த பாதிப்பும் ஏற்படாது.
அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலில் விரிசல் ஏற்படும் அதன் மூலம் பல் கூச்சம் உண்டாகும்.
சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்குவது நன்று.காலை மாலை இருவேளையும் பல்துலக்குங்கள்.
இரவு நேரத்தில் பிரியாணி
இரவு நேரத்தில் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அசைவம் ஜீரணமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கூட ஆகக்கூடும். அதனால் ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டு, இரவில் தூங்க முடியாமல் போகும்.
அசைவ உணவுகளை மதிய நேரத்திலோ, மாலை நேரத்திலோ சாப்பிடுவது நல்லது.
இரவு நேரத்தில் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், ஜீரணமாகவும் நேரம் எடுக்கும்.
பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் அந்த 8 மணி நேரத்தில்தான் நம் உடலில் மூளை மற்றும் இதயம் தவிர மற்ற எல்லா பாகங்களும் ஓய்வு எடுக்கும்.
அந்த நேரத்தில் அவற்றுக்கு அதிகப்படி வேலை கொடுப்பது நல்லதல்ல. இதனால் தொடர் ஜீரணக்கோளாறு பிரச்னைகள் ஏற்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக