தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி தயாரிப்பில் பிளாக்பெரி

மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளங்களில் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட அன்ரோயிட் இயங்குதளமானது குறுகிய காலத்தில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களும் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய கைப்பேசிகளையே வடிவமைத்து அறிமுகம் செய்கின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது பிளாக்பெரி நிறுவனமும் இணைந்துள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அந் நிறுவனத்தின் தலைமை அதிகாரி John Chen “இவ்வருட இறுதிக்குள் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட பிளாக்பெரி கைப்பேசி அறிமுகம் செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் Blackberry 10 OS இன் புதிய பதிப்பான 10.3.3 பதிப்பும் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக