இரு புறமும் பார்வையிடக்கூடிய திரையினை அறிமுகம் செய்தது LG (வீடியோ இணைப்பு)
LG நிறுவனமானது இரு புறமும் காட்சிகளை(Double Sided) உருவாக்கக்கூடிய திரையினை ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் இடம்பெற்ற IFA 2015 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.
OLED (organic light-emitting diode) தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இத் திரையில் 281 சென்ரி மீற்றர், 139 சென்ரி மீற்றர் அளவுகளைக் கொண்ட இரு வகைகளை உருவாக்கியுள்ளது.
இதேவேளை இவற்றின் தடிப்பு 5.3 மில்லி மீற்றர்களாக காணப்படுவதுடன், இந்த அளவானது iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியின் தடிப்பினை விடவும் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாதிரிகளை மட்டுமே அறிமுகம் செய்துள்ள LG நிறுவனம் விரைவில் விற்பனைக்கு விடக்கூடிய திரைகளை உருவாக்கவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக