தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 செப்டம்பர், 2015

சோப்பு, ஷாம்பூ பயன்படுத்துபவரா? இதோ உடலுக்குள் உட்புகும் ரசாயனம்


நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ போன்ற அழகு சாதனப்பொருட்கள் மற்றும் உணவுகளை வைப்பதற்கு பயன்படுத்தும் பாக்கெட்டுகளில் ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதால் ஆபத்துகள் ஏற்படுகின்றன.
சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியான்யிங், ஹுவான் ஷென் ஆகிய இரு ஆய்வாளர்கள் தலைமையிலான குழு 300-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆய்வு நடத்தியது.
கருச்சிதைவுக்கு ஆளான 132 பெண்கள், ஆரோக்கியமான 172 கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரது சிறுநீர் மாதிரிகளை அந்தக் குழு பரிசோதித்தது.
அந்தப் பரிசோதனையில், கருச்சிதைவுக்கு ஆளான பெண்களின் சிறுநீரில் "தேலேட்டுகள்' எனப்படும் வகையிலான ரசயானப் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அன்றாடம் பயன்படுத்தப்படும் சோப்பு, ஷாம்பூ, உணவுப் பொருள்களை அடைத்து வைப்பதற்காக பொதுவாகப் பயன்படுத்தப்படும் "பாக்கெட்டு'களில் இந்த வகையிலான ரசாயனப் பொருள்கள் உள்ளன.
எனவே, அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தியதன் மூலமும், அடைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்டதன் மூலமுமே "தேலேட்' ரசாயனப் பொருள்கள் பெண்களின் உடலுக்குள் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்டது.
தொழிற்சாலைச் சூழல் அல்லாது, சாதாரண வீட்டுச் சூழலில் கூட, அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மூலம் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருள்களை பெண்கள் உட்கொள்ளும் அபாயம் இருப்பது இந்தச் சோதனையின் மூலம்தான் முதல்முறையாகத் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக