தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 ஜூலை, 2014

இலவச ஊடகங்களால் தவறான கருத்துக்கே ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கப்படுகின்றதா?



தந்தைமார், பிள்ளைகளைக் கொலை செய்யும் காலத்தில், இறந்த குட்டிக்கு உயிரூட்ட முயற்சிக்கும் குரங்கு!

பிள்ளைகளை தண்டிப்பதும் கண்டிப்பதும் சமூகத்துக்கு நல்ல பிரஜைகளை கொடுக்கவே!சிலரால் தவறாக பிள்ளைகள் பயன்படுத்தப்படுவதால் அனைவரும் பிள்ளைகளை தண்டிப்பது தவறு என்பதும் அதற்கு அன்னை பிள்ளையை சூடு போட்டதை காட்டுவதும் தவறாகும்,மிருகங்கள் தங்கள் பிள்ளைகளை தண்டிப்பதை பார்த்ததே இல்லையா??அறிவில்லாதவரிடம் பணம் சென்றால் இப்படித்தான் உலகம் மாறும்!
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 07:14.15 AM GMT ]
பெற்றோர், பிள்ளைகளை தாமே அடித்தும், துன்புறுத்தியும், கொலை செய்தும் வரும் இந்தக் காலத்தில், மனிதர்களின் மனிதத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பும் 5 அறிவு விலங்குகளின் பாசம், இறந்து போன தனது குட்டிக்கு 5 நாட்களாக உயிரூட்ட முயற்சிக்கும் தாய் குரங்கொன்று பற்றி செய்தி பொலனறுவையில் இருந்து கிடைத்துள்ளது.
அவசர விபத்தொன்றில் குட்டி குரங்கு இறந்து விட்டது என்பதை இன்னும் ஏற்றுக்கொள்ளாத தாய் குரங்கு, இறந்து போன தனது குட்டியை வயிற்றில் கட்டியணைத்தவாறு கடந்த 5 தினங்களாக கத்தியபடி மரத்திற்கு மரம் தாவி திரிந்தது மன உருக்கும் சம்பவமாக இருந்தது.
வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவி வேறு நபருடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற காரணத்தினால் நடு ஜாமத்தில் தனது இரண்டு பிள்ளைகளின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட தந்தை பற்றிய செய்தி நேற்று முன்தினம் வெளியானது.
வீட்டில் இருந்து 200 ரூபாவை திருடியதால் ஆத்திரமடைந்த தாய், தனது 10 வயது மகனின் கையில் சூடு வைத்த சம்பவம் பற்றிய செய்தி கடந்த 29ம் திகதி வெளியாகியது.
மனிதத்தன்மை இருப்பதாக கூறும் மனிதர்களிடம் இருந்து நாளுக்கு நாள் இப்படியான மனிதாபிமானமற்ற செயதிகள் வரும் நிலையில், 5 அறிவு கொண்ட தாய் குரங்கின் பாசமும் அன்பும் மனிதத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக