தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜூலை, 2014

*-*-*-*-*சிவன்*-*-*-*-* *


சிவன் (Śivan) என்பவர் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், ஸ்மார்த்த மதத்தில் வணங்கப்பெறும் ஆறு கடவுள்களில் ஒருவராகவும், சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெரும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் , இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தேற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவனையும் அழித்து தன்னுள் ஒடுக்கி சிவன் மட்டும் நிலையாக இருப்பதாக சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.

இவரை வழிபடும் வழக்கம் வரலாற்றுக்கு முற்பட்டதெனவும், சிந்து மொகெஞ்சதாரோ நாகரீங்களில் இவரை வழிபாடு செய்தமைக்கான அடையளங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் தமிழர்களின் ஐந்தினை தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது.

இவர் நடனம், யோகம் என கலைகளில் சிறந்து விளங்குபவராகவும், உமையம்மையுடன் கையிலை மலையில் வசிப்பதாகவும் சைவர்களாலும், இந்துக்களாலும் நம்பப்படுகிறது. உமையம்மை தட்சனின் புதல்வி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்து சிவனை மணந்து, பின் தட்சனின் யாகத்தில் விழுந்து இறந்ததாகவும், பின்பு பர்வதராஜனின் மகள் பார்வதியாக மீண்டும் பூமியில் பிறந்து சிவனை மணந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமான் பார்வதி தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற குழந்தைகளும் உள்ளனர். அத்துடன் சிவபெருமான் தட்சனை அழிக்க தோற்றுவித்த வீரபத்திரனும், திருமால் மோகினியாக அவதாரம் எடுத்த போது பிறந்த ஐயப்பனும் சிவ குழந்தைகளாக கருதப்படுகிறார்கள்.

* அடையாளங்கள்
சிவபெருமான் ஞானக்கண் என்று கூறப்படும் நெற்றிக்கண்ணை உடையவர், அவருடைய ஆயுதமாக திரிசூலம் உள்ளது. அதனுடன் இசைக்கருவியான உடுக்கை (டம்டம்) இணைந்துள்ளது. சடாமுடியும், சாம்பல் தரித்த மேனியும் உடையவர். மான், அக்னி தாங்கியவராகவும் உள்ளார்.

தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்க சிவபெருமான் திகம்பர மூர்த்தியாக சென்றார். அவருடைய அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகள் சிவபெருமானை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். அடுத்து யானையை அனுப்பினர், அதன் தோலினையும் உரித்திக் கொண்டார். கொலையாயுதமான மழுவினை எய்தனர், அதனை தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாக சிவபெருமான் இணைத்துக் கொண்டார். சிவபெருமானின் மாமனாரான தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைசந்திரனை சடாமுடியில் சூடிக்கொண்டார். பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோலை ஏற்று கங்கையை முடியில் தாங்கினார்.

காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றை சிவபெருமான் ஆபரணங்களாக தரித்துக் கொண்டார். பாற்கடலிலை கடையும் பொழுது வாசுகி (பாம்பு)வாசுகி பாம்பினால் கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலமான கண்டத்தினை உடையவர் என்பனவெல்லாம் சிவபெருமானின் அடையாளங்களாக கூறப்படுகிறது.

* குணநலன்கள்
சிவபெருமான் இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும், கையிலையிலும், மயானத்திலும் வசிப்பவராகவும், அரக்கர்கள் தேவர்கள் என தன்னை நினைத்து தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களை கொடுப்பவராகவும், பாவங்களில் பெரிய பாவமான பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கும் வல்லமை உடையவராகவும் கூறப்படுகிறார்.

தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங் களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார். என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர்.

* வழிபாடு
சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை

*) காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
*) நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
*) மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
*) அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

* சிவனின் ஐந்து முகங்கள்
. சத்யோ சோதம்
. வாமதேவம்
. அகோரம்
. தற்புருடம்
. ஈசானம் இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.
பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.

* சிவ அவதாரங்கள்
சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், சிவபெருமான் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்மபுராணம் கூறுகிறது. அவையாவன, ஸ்வேதா, சுதாரா, மதனன், சுஹோத்திரன், கங்கணன், லோகாக்ஷி, ஜெய் கிஷ்ஹவ்யன், தாதிவாகன், ரிஷபன், பிருகு, உக்கிரன், அத்திரி, கவுதமன், வேதசீர்ஷன், கோகர்ணன், ஷிகந்தகன், ஜடமாலி, அட்டஹாசன், தாருகன், லங்காலி, மகாயாமன், முனி, ஷுலி, பிண்ட முனீச்வரன், ஸஹிஷ்ணு, ஸோமசர்மா, நகுலீஸ்வரன் என்பனவாகும்.

இவற்றில் நகுலீஸ்வரன் என்பவர் பாசுபத சைவத்தின் ஒரு பிரிவான நகுலீச பாசுபதத்தினை உருவாக்கியவர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக