தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஜூலை, 2014

ஹெபடைடிஸ்- சிறப்பு பார்வை!!


கல்லீரலை பாதிக்கும் வைரஸ்களில் மிகவும் முக்கியமானது ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி.
உயிர்க்கொல்லி வைரஸ் ஆன எய்ட்ஸ் வைரஸ் பரவுவதைவிட இந்த ஹெபடைடிஸ் பி வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது.
ரத்தமாற்று, செக்ஸ், கர்ப்பமான தாயிடமிருந்து குழந்தைக்கு, வைரஸ் பாதிக்கப்பட்ட ஊசியைப் போட்டுக்கொள்ளுதல், சில சமயங்களில் குழந்தைகள் ஓடி, ஆடி, உருண்டு, புரண்டு விளையாடும் போதும்கூட இந்த வைரஸ் உடலில் புகுந்துவிடும் அபாயம் உண்டு.
அறிகுறிகள்
மஞ்சள் காமாலை, பசியின்மை, சோர்வு, காய்ச்சல், அடர்நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், வாந்தி
சிகிச்சை முறை
கல்லீரல் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருந்தால் அதற்கு பெரிய அளவில் சிகிச்சை தேவையில்லை.
இருந்தாலும் உள் உறுப்புகளின் செயல்பாடுகளை ரத்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதிகளவில் ஓய்வு- திரவ உணவு மற்றும் ஆரோக்கியமான காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கல்லீரலைக் காக்க எளிய வழிகள்
1. மது, புகையிலை போதை பொருள்களை கட்டாயம் நீக்க வேண்டும்.
2. கெட்டித் தயிர், வெண்ணெய், எண்ணெய் பலகாரங்கள், முட்டை, மாமிசம், வேர்க்கடலை ஆகியவற்றை குறைந்த அளவே வாரம் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
3. உணவில் மிதமான உப்பு, காரம், மசாலா சேர்க்கவும். பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகு + சீரகம் + கிராம்பு சேர்ந்த மசாலா பொருள்களைச் சேர்க்கலாம்.
4. இரவில் கண் விழிப்பது, தண்ணீர் குறைந்த அளவே குடிப்பது, நீண்ட தூர பயணங்களை அடிக்கடி மேற்கொள்வது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
5. அதிக இனிப்புகள் மற்றும் நவீன ரசாயன மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவது கூடாது.
6. துரித உணவு, ஐஸ்க்ரீம், சாக்லெட் வகைகளை அடிக்கடி அதிக அளவு சாப்பிடக் கூடாது.
7. ஊறுகாய் மற்றும் நொறுக்குத் தீனிகளை தேவைக்கேற்ப குறைவான அளவு எப்போதாவது சாப்பிடலாம்.
8. கீழாநெல்லி செடியை வாரம் 2 நாளாவது அரைத்து மோருடன் சாப்பிடவும். இதே போன்று மஞ்சள் கரிசலாங்கண்ணியையும் சாப்பிடவும்.
9. வெந்தயப் பொடி அரை ஸ்பூன் தினசரி மோருடன் கலந்து மாதம் 10 நாள் சாப்பிடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக