தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஜூலை, 2014

இன்றைய பெண்களின் நாகரீகம் மது!!

இன்றைய சமுதாயம் நவநாகரீகமாக ஜொலிக்க ஆரம்பித்து விட்டது. கூடவே பெண்களும், சேர்ந்து ஜொலிக்கின்றனர்.
ஆம், இன்றைய இளம் பெண்களின் லேட்டஸ்ட் அடையாளம் மது அருந்துவது. எந்தவித சங்கோஜமும் இல்லாமல் பலர் மத்தியில் நின்று மது அருந்துவதை நாகரீகத்தின் வெளிப்பாடாக கருதுகிறார்கள்.
அன்றைய காலத்தில், பெண்கள் நாலு பேர் மத்தியில் நடப்பதற்கே கூச்சப்படுவார்கள், ஏன், தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கூட ஒரு செம்பு தண்ணீரை கொடுத்துவிட்டு அவர்களின் முகத்தை திரும்பி பார்க்காமல் சென்று விடுவார்கள்.
ஆனால், இன்றைய பெண்களோ, யார் வந்தாலும் அவர்கள் மத்தியில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்து கும்மாளம் போடுவது, ஆண்களுடன் சேர்ந்து மது அருந்துவது என் எல்லாவற்றிலும் சம உரிமை பெற்றுவிட்டார்களாம்.
ஆண்களுக்கு சமமாக எல்லா உரிமைகளும் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், மது அருந்துவதிலும் சம உரிமை பாராட்டினால் எங்கே போகும் இந்தப்பாதை?
சமுதாயத்தை சீர்திருத்த வேண்டிய பெண்களும், ஆண்களுடன் சேர்ந்து குடித்தால் வீட்டு ஒரு மதுக்கடை திறக்க வேண்டியது தான்.
பல பணக்கார பார்ட்டிகள் திருமண விழாக்கள், திரைப்பட விழாக்களில் எல்லாம் பெண்கள் மது அருந்துவது சகஜமாகி விட்டது.
மது எப்போதும் யாருக்குமே நன்மை செய்ததில்லை. மது என்றவுடன் சீரழிந்த ஆண்கள் மட்டுமே நம் கண்முன் வந்து நிற்கிறார்கள்.
அந்த வரிசையில் இன்று மெல்ல மெல்ல பெண்களும் இடம் பிடித்து வருகிறார்கள் என்பது கொடுமை.
அற்பத்தனமான மகிழ்ச்சிக்கு அடிமையாகும் பெண்கள் அழகான வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
பணக்கார பெண்கள், வேதனை, மன உளைச்சலில் குடித்துவிட்டு வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.
இதனால் ஏற்படும் பேராபத்துகள் அவர்கள் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்து விடக்கூடும். 21 வயதுக்குட்பட்டவர்கள் குடிக்கக்கூடாது என்று சட்டம் இருந்தும் அதை யார் மதிக்கிறார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக