தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஜூலை, 2014

வேஷ்டிக்கு தடையா!



தமிழர்களின் கலாச்சார ஆடை என்றால் ஆண்களுக்கு வேஷ்டியும், பெண்களுக்கு புடவையும் தான் சொல்வார்கள்.
பெண்கள் தூக்கி சொருகும் சேலையும், ஆண்கள் மடிச்சு கட்டும் வேஷ்டியும் அழகோ அழகு.
ஆனால் அந்த வேஷ்டிக்கு தடை விதித்தால், தமிழர்கள் சும்மா விடுவார்களா என்ன? ஆம் வேஷ்டி அணிந்தவர்கள் தங்கள் கிளப்பில் நுழையக்கூடாது என சென்னை கிரிக்கெட் கிளப் கூறி உள்ளது. இந்த விதிமுறை அடிப்படையில், அங்கு சென்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.
அனைத்து அரசியல் கட்சிகளும், வேஷ்டிக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து அறிக்கைகள் விட்டன. மாநிலம் முழுவதும் வக்கீல்கள் சங்கங்கள் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தின.
இதனால் இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. வேஷ்டிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் கிளப்களில், வேஷ்டிக்கு தடை விதிப்பது குறித்து கோர்ட் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.
சட்டசபை தான் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதுதொடர்பான வழக்கை, வேறு அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், வேஷ்டி பிரச்னை இன்று பூதாகரமாக சட்டசபையில் எதிரொலித்தது.
இது குறித்த விவாதத்தின் போது, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது, வேஷ்டி அணிந்து வந்த நீதிபதிக்கு தடை விதித்தது பண்பாட்டை அவமதிப்பதாகும். மேலும், தனிநபர் உரிமை, ஜனநாயகம், கலாச்சாரம் ஆகியவற்றிற்கு எதிரானதாகும்.
இது குறித்து விளக்கம் கேட்டு, குறிப்பிட்ட கிளப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்படும். தமிழர்களின் கலாசாரத்திற்கு எதிராக செயல்படும் எந்த நடவடிக்கை எடுத்தாலும், அந்த கிளப்புகளின் உரிமம் ரத்து செய்யப்படும். அதற்கான தீர்மானம் நடப்பு கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும்,' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக