பூச்சி இனத்திலேயே மிகவும் அழகான, அனைவருக்கும் மிகவும் பிடித்தது வண்ணத்துப்பூச்சி தான்.
உலகில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன, வெப்ப மண்டலக் காடுகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றன.
பொதுவாக அனைத்து பூச்சிகளை போன்றும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் 6 கால்கள் உள்ளன.
அத்துடன் உடல் மூன்று பகுதிகளாக தலை, நெஞ்சுப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதி என்பனவற்றையும், இரண்டு உணர்கொம்புகளையும் மிகச்சிறிய இரண்டு கண்களையும் அழகான வண்ணங்களுடன் கூடிய சிறகுகளையும் கொண்டுள்ளது.
மேலும் இவைகளின் உடல் மிகச்சிறிய நுண்ணிய மயிர்களால் சூழப்பட்டுள்ளது.
பளபளப்புக்கு காரணம்?
இவற்றின் இறக்கைகளின் மீது வண்ண நிற செதில்கள் காணப்படுகின்றன, இவைதான் பூச்சிகளின் பளபளப்பிற்கும் காரணம்.
இதில் செதில்களை அகற்றி விட்டால் தெளிந்த பகுதிபோல் தோன்றும், மேலும் அவைகளால் பறக்கவும் முடியாது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக