தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஜூலை, 2014

அழகுடன் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமா? ஒரு ஸ்ட்ராபெரி சாப்பிடுங்கள்!

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது.
எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.
நமக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கருதப்படும் இந்த பழங்கள், தற்போது இந்தியாவில் சிறு நகரங்களில் கூட கிடைக்கின்றது.
இந்த பழங்களில், வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்றுநோயை தடுக்கும் திறன் வாய்ந்தது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை இப்பழத்தில் உள்ளது.
இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால், கேன்சர் வருவதை தடுக்கலாம். மேலும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருள் சொக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவு ஊட்டியாகவும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழம் உண்ணும் பழமாக மட்டுமல்ல, அழகை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
செயற்கை கிரீம்களை பயன்படுத்தி சருமத்துக்கும், தோலுக்கும் தீங்கும் விளைவிக்கும் அவற்றை பயன்படுத்துவதை விட, இயற்கையாக கிடைக்கும் இதுபோன்ற பழங்களை பயன்படுத்தினாலே போதும். ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்தை இலேசாக வெளுக்க செய்யும் தன்மை கொண்டது.
இன்று ஆண், பெண் அனைவருக்கும் பெரிய குறையாக இருப்பது உடலின் நிறம்தான். இதற்கும் சருமத்துக்கு இளமையை கூட்டி, பளபளப்பைத் தருவது பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது பூசுவதாலும் அழகைப் பெறலாம்.
அதிலும், பழ வகைகளில் அதிக அளவு முகத்தை பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி.
சிவப்பு நிறத்தில் ஜொலிக்க விரும்புபவர்கள், நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை ஒரு துணியில் கட்டி, பிழிந்து சாறு எடுக்க வேண்டும்.
இந்த சாற்றை, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்துக்கு 3 முறை இதுபோன்று செய்தால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தை கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதா கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக