தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஜூலை, 2014

வளமான வாழ்க்கைக்கு வாக்கிங்!


கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத வாழ்க்கை வாழ வேண்டும்.
பலவகையான ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தாலும், வாக்கிங் என்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கும் என்று சொன்னால் அது மிகையாகாது,
இதோ வாக்கிங் செல்வதால் கிடைக்கும் பயன்கள்
* தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன.
* நடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது.
* வாக்கிங் செல்வதால் மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது. தினமும் வாக்கிங் செல்வதால் உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன.
* தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம், இன்சுலின் சுரப்பது சீராக்கப்பட்டு நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
* ஒரு மணி நேரத்திற்கு 6 கி.மீ., வேகத்தில், கை, கால்களை வீசியப்படி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 25 நிமிடம் வீதம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் வாக்கிங் போக வேண்டும்.
* நடைப்பயிற்சியின் போது இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, உடல் வியர்வையை வெளியேற்றும் தன்மை கொண்ட தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். செருப்பு, ஷூ என வயது மற்றும் விருப்பத்திற்கேற்ப காலணிகளை அணியலாம். இரவில் வாக்கிங் போகக்கூடாது.
* அமைதியான சுற்றுப்புற சூழலுடன் தூய்மையான வளிமண்டல காற்று கிடைக்கும், அதிகாலை வேளையில், திறந்தவெளியில், வாக்கிங் போவதே, சிறந்த பலனை தரும்.
* அவரவர் இருப்பிடத்தை பொறுத்து மொட்டை மாடி, தெருக்களிலும், நடைப்பயிற்சி போவதில் தவறில்லை.
* உணவு செரிமானம் பாதிக்கப்படும் என்பதால், இரவில் உணவருந்திய பின் வாக்கிங் போகக் கூடாது.
* மைதானம், பூங்காக்களின், இடப் பக்கம், வாக்கிங் போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும் நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
* இதற்கு, ஆய்வுபூர்வமான நிரூபணங்கள் எதுவும் இல்லை. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும் வாக்கிங் போனாலே போதும். நோயற்ற வளமான வாழ்க்கை வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக