தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஜூலை, 2014

சூப்பர் எனர்ஜிடிக் வேண்டுமா? இதோ பானங்கள்!

நாள் முழுவதும் சுறுசுறுப்போடு இயங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம் ஆனால் முடியவில்லையே.
அவ்வாறு நினைப்பவர்கள் துவண்டுவிட வேண்டாம், இதோ உங்களை சுறுசுறுப்போடு இயங்க வைக்கும் குளிர்பானங்கள்.
மாதுளைம்பழச் சாறு
இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எண்ணிலடங்காமல் உள்ளது. இவைகள் உங்கள் அறியும் ஆற்றல் மற்றும் ஞாபக திறனை மேம்படுத்த உதவும்.
இந்த பானத்தை தினமும் ஒரு கிளாஸ் பருகினால் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
தேநீர்
கிரீன் அல்லது ப்ளாக் டீயை தேர்ந்தெடுங்கள். தேநீர் பருகுவது மூளையின் நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் சிறந்த வழியாகும்.
அதற்கு காரணம் கிரீன் டீயில் உள்ள EGCG. இது மூளையின் அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
தண்ணீரில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கப் ப்ளாக் டீ குடித்தால் போதும் உங்கள் எதிர்வினை நேரம் முன்னேற்றம் தெரியும்.
பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ்
இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிழிந்து ஜூஸ் எடுத்தால் அருமையான நிறத்தில் ஒரு ஜூஸ் கிடைக்கும்.
அதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வளமையாக உள்ளது. இதை பருகுவதால் ஏதோ நோபல் பரிசு பெற்றதை போல் ஓர் உணர்ச்சியை பெறுவீர்கள்.
மூளையில் உள்ள நைட்ரிக் ஆக்சைட் உற்பத்தியை அதிகரிக்க உதவும் பீட்ரூட். இதனால் சுற்றோட்டம் மேம்படும். கேரட்டில் பீட்டா-கரோட்டீன் உள்ளது. இது கண்களுக்கு நன்மை அளிப்பதோடு மட்டுமல்லாமல், மூளை தேய்வையும் தடுத்து நிறுத்தும். நரம்பியல் தேய்வு நோய்களான அல்சைமர் போன்றவைகளை ஆப்பிள்கள் தடுக்கும்.
இளநீர் மற்றும் தேங்காய் பால்
தேங்காயில் உள்ள அனைத்து கூட்டுப் பொருட்களும் உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை விளைவிக்கும், நீர்ச்சத்தை அளிப்பதோடு அதில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
சிகப்பு ஒயின்
ஒயினில் உள்ள பாலிஃபீனால்கள் (சொக்லெட்டிலும் கூட) மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதால், அதன் சக்தியை அதிகரிக்க செய்யும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவிடும். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அளவாக வைத்துக் கொள்வதே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக