தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள இந்த தகவலில், நாட்டிலேயே தமிழகத்தில்தான் கடந்த ஆண்டு, அதிக அளவிலான விபச்சாரத் தடுப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில், 2வது மாநிலமாக ஒருங்கிணைந்த ஆந்திரா இடம்பெற்றுள்ளது, நாட்டின் விபச்சார சம்பவங்களில் 23 சதவீத சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன.
இந்நிலையில், 2013ம் ஆண்டு இந்தியா முழுவதும், மொத்தம் 2541 விபச்சாரம் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் தமிழகத்தில் மட்டும் 549 வழக்குகளும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 489 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மேலும் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பல துணை நடிகைகள், மொடல் அழகிகள்தான் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், பணக்காரர்கள், வர்த்தகர்கள் போன்றவர்கள் அவர்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது ஆன்லைன் மூலம் மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் விபச்சாரம் களைகட்டுவதாகவும், பெரும்பாலும் ஹொட்டல்களில் தான் விபச்சாரம் அதிக அளவில் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக