தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஜூலை, 2014

பாத்ரூமில் பயன்படும் சவர்களினால் நோய் பரவும் ஆபத்து!

பாத்ரூமில் பயன்படுத்தப்படும் சவர்களில் பத்தில் ஒன்றினால் பக்டீரியாக்களினால் ஏற்படுத்தப்படும் Crohn வகை நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை Leicester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது கால்நடைகளில் Johne எனப்படும் நோயை விளைவிக்கும் பக்டீரியா வகைகளான மைக்ரோபக்டீரியம் மற்றும் பராரியூபர்குளோஸிஸ் ஆகியவையே மனிதனில் Crohn வகை நோய்களை உண்டாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வகை பக்டீரியாக்கள் சவரின் உட்பகுதியில் காணப்படுவதனால் குளிப்பதற்கு முன்னர் சிறிது நேரம் நீரை ஓடவிட்டு பின்னர் குளிப்பதன் மூலம் குறித்த பக்டீரியாக்களின் தொற்றுதலில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
இதன் காரணமாக நோய்த்தாக்கத்தினை தவிர்க்க முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக