தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஜூலை, 2014

சூப் பற்றிய சூப்பர் தகவல்கள்!

உடல் நலமில்லாதவர்களுக்கும் உடல் இளைக்க நினைப்போருக்கும் உகந்த உணவு சூப்.
சூப் ஆரோக்கியமான உணவு என்பதில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து ஆலோசகர்கள் என யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், சூப்பில் பல வகைகள் உள்ளன.
தெளிவான சூப், கடைந்த சூப், முழு உணவு சூப், குளிர்ந்த சூப் என சூப்பில் பல வகைகள் உள்ளன.
சூப்பை பசியைத் தூண்டும் பானமாகவும் கொடுக்கலாம். உடல் இளைக்க நினைப்போருக்கான ஒருவேளை உணவாகவும் கொடுக்கலாம்.
உடல்நலமில்லாதவர்களுக்கான சத்து பானமாகவும் தயாரித்துக் கொடுக்கலாம்.
சூப் என்பது குறைந்த கலோரியும், அதிக வைட்டமின், தாதுச் சத்துகளும் கொண்டது. வாசனைப் பொருட்கள் சேர்க்கப்படுவதால், இந்த வகை சூப்புகள் பசியைத் தூண்டக் கூடியவை.
கடைந்த சூப்புகளில் வேக வைத்து அரைத்த காய்கறிக் கலவையோடு, பால் சேர்த்த ஒயிட் சாஸ் சேர்க்கப்படும்.
இவை உடலுக்கு ஊட்டம் தருவதோடு, எளிதில் செரிமானமாகக் கூடியவை. உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு நோயிலிருந்து மீண்டு, தேறிக் கொண்டிருக்கிற வேளையில் அதிகமான ஊட்டச் சத்து தேவைப்படும்.
ஆனால், குளிர்ந்த சூப்புகளும் உண்டு. உஷ்ணம் அதிகமான பகுதிகளில் இது போன்ற கோல்ட் சூப் வகைகள் மிகப் பிரபலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக