தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஜூலை, 2014

காபி அதிகம் குடிப்பவரா நீங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் !


*வெந்நீர் விட்டுத் தயாரித்த டிகாஷனை எந்தக் காரணம்கொண்டும் சூடுபடுத்தவே கூடாது.

*டிகாஷனோடு சேர்த்து காபியை அடிக்கடி சூடுபடுத்தி அருந்துவது மிகவும் தவறு.

*இன்ஸ்டண்ட் காபியைவிட டிகாஷன் சேர்க்கப்பட்ட காபியை அருந்துவதே பாதுகாப்பானது.

*அன்றாடம் 2 கப் காபிக்கு மேல் வேண்டாம்.

*மேலை நாடுகளில் அதிக அளவில் 'கோல்டு காபி’ (Cold Coffee) தான் அருந்துகிறார்கள். சூடான காபியைவிட, குளிர்ந்த காபி குடிப்பதே நல்லது.

*காபி ஸ்ட்ராங்காக, சுவையாக இருக்கவேண்டும் என்பதற்காக, சிக்கரி சேர்க்கப்படுகிறது. காபியில் 20 சதவீதம் தான் சிக்கரி சேர்க்க வேண்டும். அதிகம் சேர்ப்பது நல்லதல்ல.

*காபிக்கு மாற்றாக ஃப்ரெஷ் ஜூஸ் வகைகள், க்ரீன் டீ அருந்தலாம். அதிக அளவு புத்துணர்ச்சி கிடைக்கும்.

*காபிக்கு அடிமையானவர்கள், காபியை உடனடியாக நிறுத்திவிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகக் காபியின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், திடீரென நிறுத்தும்போது, குறிப்பிட்ட அந்த காபி அருந்தும் நேரத்தில் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டிவிடும் செயல் நின்றுபோவதால், கடுமையான தலைவலி ஏற்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக