ஆஸ்துமா நோயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகளால் பாரிய ஆபத்து ஏற்படும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது ஆஸ்துமா நோயினைக் கட்டுப்படுத்துவதற்கக வழங்கப்படும் மருந்து வகைகளின் தாக்கங்களினால் குழந்தைகளில் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நோய்க்கான சிகிச்சை வழங்கப்படும் முதலாவது வருடத்திலிருந்தே இந்த வளர்ச்சி பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், மருந்தின் அளவினை குறைப்பதன் மூலம் பாதிப்பினையும் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
அதாவது 100 மில்லி கிராமிலும் குறைவான மருந்தினை உள்ளெடுப்பதால் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு குறைவடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆஸ்துமா தாக்கத்தலிருந்து விடுபட ஸ்ட்ரீரொயிட்ஸ்(Steroid) உள்ளடங்கிய மருந்து வகைகளே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் வளர்ச்சி பாதிப்பு அதிகமாகும் என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக