தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, July 29, 2014

விரைவில் செரிக்கும் உருளைக்கிழங்கு?

உலக அளவில் அரிசி, கோதுமைக்கு பிறகு அதிகம் பயிரிடப்படுவது உருளைக்கிழங்குதான்.
உருளைக்கிழங்கு உயர்தரமான சத்துணவு கொண்ட காய்கறியாகும். 100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 கிராம் ஆகும்.
இதில் புரதம் 16 சதவீதம் உள்ளது. பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவையும் போதிய அளவில் உள்ளன.
வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான சுண்ணாம்புச்சத்து இதில் ஏராளமாக உள்ளன. உருளைக்கிழங்கு எளிதில் செரிக்கும் தன்மை உடையது.
வயதானவர்களுக்கு தேவையான புரதம், மாவுப்பொருட்கள், சர்க்கரை, சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம் போன்ற அனைத்தும் உருளைக்கிழங்கில் கிடைத்து விடுகிறது.
உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால்தான் சத்துக்கள் கிடைப்பதுடன், எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாதான் சிறந்த தொட்டுக்கொள்ளும் உணவாகும். சில காய்கறிகளிலும், சில வகை கிழங்குகளிலும், சில வகை கீரைகளிலும், சில வகை பருப்புகளிலும் வாயு இருக்கத்தான் செய்கிறது.
அதற்காக நாம் அதை சாப்பிடாமல் இருக்கிறோமா? சாப்பிடுகிறோம். எனவே உருளைக்கிழங்கை அளவோடு சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுடைய எடைகூடாது, தொப்பையும் வராது.
அதனால் எந்த பயமும் இல்லாமல் உருளை கிழங்கை சாப்பிட்டு சந்தோஷமாக வாழுங்கள்.

No comments:

Post a Comment