தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஜூலை, 2014

இரத்தத்தை சுத்தப்படுத்தும் ப்ராக்கோலி பொறியல்!

ப்ராக்கோலியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.
இவை இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் ஆபத்தை விளைவிக்கும் கொடிய நச்சுக்களை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
இதோ அந்த ப்ராக்கோலியில் பொரியல் செய்து சாப்பிடலாமா!
தேவையான பொருட்கள்:
ப்ராக்கோலி - 1 (சிறியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ப்ராக்கோலியை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும்.
* பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* ப்ராக்கோலி மற்றும் உப்பு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு வதக்கி, ப்ராக்கோலி நன்கு அடர் நிறத்தில் மாறும் போது, அதில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ப்ராக்கோலி பொரியல் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக