தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஜூலை, 2014

உற்சாகம் தரும் குமரி


சர்வதேச சுற்றுலா பயணிகளும் விரும்பும் மிகவும் புகழ்பெற்ற இடம் தான் கன்னியாகுமரி, முக்கடல்களும் சங்கமிக்கும் குமரி முனை.
சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்ப்பதற்கு என்றே ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
மெய்மறந்து கடலின் அழகை ரசிக்கலாம், அதுமட்டுமா ஆன்மிக பயணம் விரும்புவோரும் வந்து செல்லம் இடமாகவும் விளங்குகிறது.
விவேகானந்தர் பாறை
கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது.
இங்கு செல்வதற்கு படகில் தான் போக வேண்டும், மண்டபத்திலுள்ள தியான அறையில் சற்று நேரம் அமர்ந்தால் மனஅமைதி கிடைக்கும்.
மண்டபத்தில் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் தொடர்பான பயனுள்ள புத்தகங்கள் கிடைக்கும்.
மாத்தூர் தொட்டிப்பாலம்
திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது.
ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம்.
ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும்.
திற்பரப்பு அருவி
‘குமரி குற்றாலம்’ என அழைக்கப்படும் இந்த அருவி நாகர்கோவிலில் இருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது. கோடை காலத்திலும் வற்றாத அருவி.
இங்கு சிறுவர்கள் குளிக்க வசசதியாக சிறிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. இயற்கையான சூழ்நிலையில் இந்த அருவி அமைந்துள்ளது.
முட்டம் கடற்கரை
நாகர்கோவிலில் இருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ‘நடித்த’ பிறகு பிரபலமானது.
இங்குள்ள கடற்கரை பகுதிகள், பாறை கூட்டங்கள், செம்மண் தேரிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும். பாறைகளில் நின்று சூரியன் மறைவதை காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக