தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஜூலை, 2014

மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு?

மைசூர் நகரில் அரண்மனைக்கு செல்வதாக கூறப்படும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
மைசூர் நகரில் நீலகிரி சாலை, சாமராஜா டபுள் ரோடு சந்திக்கும் இடத்தில் கடந்த வாரம் நிலத்தில் பிளவு ஏற்பட்டு இருந்தது.
இதனை பாதாள சாக்கடையாக இருக்கும் என நினைத்த மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை அந்த பகுதியை சரி செய்யுமாறு கூறியுள்ளனர்.
இதன்பின் சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டபோது, அதில் பாதாள சாக்கடை இருப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
மாறாக, சதுர வடிவில் 30 அடி ஆழத்துக்கு பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் ஏறி இறங்குவதற்கு வசதியாக கற்கள் அமைக்கப்பட்டு இருந்துள்ளன.
இதனால் ஆச்சரியம் அடைந்த ஊழியர்கள் அருகில் தோண்டியபோது இதேபோன்று ஒரு பள்ளம் இருந்ததாகவும் அதில் 20 அடி தொலைவுக்கு கீழே இறங்கி பார்த்தால், மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், தொல்பொருள் ஆய்வு துறை கமிஷனர் பெட்சூர் மட் மற்றும் அதிகாரிகள சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பாதை மைசூர் அரண்மனைக்கு செல்லும் பாதை தானா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இது மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை என்றும் மன்னர் காலத்தில் இப்பாதை உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இப்பகுதி மக்கள் இந்த சுரங்கபாதை வியப்புடன் பார்த்து ரசித்ததால் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக