தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஜூலை, 2014

அதிகளவு மின்சக்தியை பெற உதவும் திட்டம்!

வீடுகள், வர்த்தக நிலையங்களில் மீண்டும் மீண்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யும் வகையிலும் உலகின் மிகப்பெரிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சூரிய சக்தி மற்றும் காற்று என்பவற்றின் மூலம் கலப்பு முறையில் வருடாந்தம் 106,000 kWh மின்சக்தியை உற்பத்தி செய்யும் இத்திட்டத்தினை ஜமேக்காவின் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் நிறுவப்பட்டுள்ளது.
இதில் காற்றின் மூலம் 25kW மின்சக்தியும், சூரிய சக்தியின் மூலம் 55kW மின்சக்தியும் பெற்றுக்கொள்ள முடிவதுடன் முதலீடு செய்த தொகையை 4 வருடங்களுக்கு மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் 25 வருடங்களில் 2 மில்லியன் அமரிக்க டொலர்களை மீதப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக