இந்த காலத்தில் பெரியவர்களுக்கு கூட ஆடை வாங்கி விடலாம், ஆனால் குட்டீஸ்களுக்கு வாங்குவது என்பது பெரிய சிரமம் தான்.
அதுவும் குட்டீஸ்களின் ஆடை விலையை கேட்டால் மலைத்து போய்விடுவோம்.
இது போக அவர்களின் உடலுக்கு பாதுகாப்பான உடைகளையும் வாங்க வேண்டும். குட்டிகள் அழகா ஜொலிக்க வேண்டும் என்பதற்காக கலரையும், டிஷைனையும் பார்த்து வாங்காமல், அவர்களின் அளெகரியங்களை பார்த்து வாங்க வேண்டும்.
வெயில் காலத்தில் காட்டன் உடைகளே குழந்தைகளின் உடலுக்கு பாதுகாப்பு. அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும் என்பதால் எளிதில் கழற்றவும் அணியவும் தகுந்த உடைகளை வாங்க வேண்டும்.
உடைகளில் பட்டன்கள், கொக்கிகள் இருந்தால் குழந்தையின் உடலை உறுத்தக்கூடும். அவற்றைப் பிய்த்து குழந்தைகள் வாயில் போட்டுக்கொள்ளவும் வாய்ப்புண்டு.
எலாஸ்டிக் வல்க்ரோ, லேஸ் வைத்த உடைகள் நல்லது. ஒன் பீஸ் டிரெஸ், வின்ட்டர் சூட் போன்ற முழுவதும் ஜிப் பொருத்தப்பட்ட உடைகள் வாங்கும்போது, அவை குழந்தையின் கழுத்தை உறுத்தாதவாறு உள்ளதா என்று பார்க்கவும்.
ஆண் குழந்தைகளுக்கு ஜிப் வைத்த கால்சட்டை போடும்போது உள்ளாடை அவசியம்.
இதுபோக எந்தெந்த விழாக்களுக்கு என்ன ஆடை அணியலாம் என்பதையும் பாருங்கள்.
திருமண விழாக்கள்
திருமண விழாவுக்கு ஏற்ற உடை பட்டுப் பாவாடைதான். அந்த நேரங்களில் அவர்களுக்கு கழுத்தை ஒட்டி நெக் செயினும், ஒரு சிறிய காசு மாலை அல்லது செயின் போடவும்.
நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைக்கு வங்கி, வளையல், கைகளுக்கு மெஹந்தி, மோதிரம் செட், இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டால், ரொம்ப அழகாக இருக்கும்.
எந்த வகை நகையாக இருந்தாலும், ஒரே மாதிரி போடவும். பிளைன் நகைகள் திருமண விழாவிற்கு அழகாக இருக்கும். முடிந்தவரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல், ஒரு கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.
ரிசப்ஷன்
மாலை நேர ரிசப்ஷனுக்கு, குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற உடைகள் எது என்றால் காக்ராசோளி, அனார்கலி, சகாரா போன்ற நல்ல ஒர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும்.
இந்த மாதிரி ஆடைகள் போடும் போது, டிரஸ்க்கு மேட்சாக நகைகள் போடவும். கைகள் நிறைய வளையல் போடவும்.
பர்த் டே பார்ட்டி
அடிக்கடி போவது இங்குதான். பார்ட்டிக்கு போகும் போது சிம்பிளாக, மார்டனாக டிரஸ் போடவும். அந்த டிரசுக்கு மேட்சாக மெல்லிய செயின், வளையல், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஒட்டினால், அழகாக இருக்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக