கூகுள் நிறுவனம், சுவிட்ஸர்லாந்தினைச் சேர்ந்த மருந்து நிறுவனமான Novartis AG's Alcon உடன் இணைந்து ஸ்மார்ட் கன்டாக்ட் லென்ஸினை உருவாக்கவுள்ளது.
இந்த லென்ஸ்ஸானது உடல் ஆரோக்கியத்தினை கண்காணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்டலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த லென்ஸ் உணரி (Antenna), கப்பாசிட்டர், கன்ட்ரோலர், சென்சார் ஆகியவற்றினை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
எனினும் இந்த லென்ஸ் நுகர்வோரின் பாவனைக்கு வருவதற்கு 5 வருடங்கள் வரை எடுக்கும் என கூகுள் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக