தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 மார்ச், 2015

இந்த உணவுகளை சாப்பிட்டால் அதிகம் பசிக்கும்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசியின்மை எனும் உடல்நலக்கோளாறால் சிக்கித் தவித்து வருகின்றனர்.
விதவிதமான உணவுகளை கண்முன்னே கொண்டு வந்து வைத்தாலும், அவர்களுக்கு சாப்பிட தோன்றாது.
பசியின்மையில் இரண்டு வகை உண்டு.
முதல் வகை
சிலர் அதிக மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஏதோ ஒன்றை எதிர்பார்த்து இருப்பார்கள், ஏதாவது ஒரு வேலையில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள், தூக்கத்தை இழந்திருப்பார்கள்.
இதுபோன்ற காரணங்களுக்காக சிலருக்கு அந்த சமயம் பசியே எடுக்காது, சாப்பிடத் தோன்றாது.
இந்த பசியின்மை சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும், இதனால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது, உடலும் களைப்பு அடையாது.
இரண்டாவது வகை
சிலர் ஏதோ ஒருவகையில் அதீத பயத்துடனேயே இருப்பார்கள், அளவுக்கு அதிகமாக கவலைப்படுவார்கள், எப்போதும் மனவருத்தத்திலேயே இருப்பார்கள், இவர்களுக்குப் பசியே எடுக்காது.
இன்னும் சிலருக்கு மஞ்சள் காமாலை, புற்றுநோய், காய்ச்சல் இருந்தால் பசி எடுக்காது. இந்த பசியின்மை தானாக சரியாகாது. உடலை வருத்தி, சோர்வடையச் செய்து விடும். உடல் மெலியத் தொடங்கிவிடும்.
இந்தவகை பசியின்மை பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும், இதனால் மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது நல்லது.
பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் பசியின்மை சரியாகிவிடும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.
பீன்ஸ்
பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்தும், கோலெயைஸ்டோக்கினின்(cholecystokinin) எனும் மூலப்பொருளும் பசியின்மையை போக்குகிறது.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் இருக்கும் கேட்டச்சின்கள் எனப்படும் கூட்டுப்பொருள் பசியின்மையை சரி செய்கிறது.
பேரிக்காய்
ஆப்பிளை விட அதிகமான உயர்ரக நார்ச்சத்து பேரிக்காயில் நிறைந்துள்ளது. மூன்று ஆப்பிள் சாப்பிடுவது ஒரு பேரிக்காய் சாப்பிடுவதற்கு சமம் ஆகும். இது பசியின்மையை போக்குவதில் சிறந்த உணவாக இருக்கிறது.
இலவங்கப் பட்டை
இரைப்பையில் பசியை தூண்டுவதற்கான சுரப்பியை அதிகப்படுத்த இலவங்கப் பட்டை உதவகிறது.
மிளகாய்
பசியின்மையை சரி செய்வதற்கான மற்றுமொரு சிறந்த உணவு மிளகாய்.
ஆனால், மிளகாயை அதிகப்படியாய் உபயோகப்படுத்தினால் அல்சர் வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக